சர்க்கரை சாப்பிடாமல் இருந்தா என்ன ஆகும் தெரியுமா..?
27 மார்கழி 2023 புதன் 15:52 | பார்வைகள் : 2117
உங்கள் டயட்டில் சர்க்கரையை சேர்க்காமல் இருந்தாலே, உங்கள் ஒட்டுமொத்த உடல்நலனில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும் என மருத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள். இதனால் உங்கள் உடலும் மனமும் புத்துணர்ச்சி அடையும் எனக் கூறப்படுகிறது. ஆனால் உணவில் சர்க்கரையை தவிர்ப்பது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல. ஒரு வாரத்திற்கு உங்கள் உணவில் சர்க்கரையை சேர்க்காமல் இருங்கள். அப்புறம் பாருங்கள், உங்கள் உடலில் ஏற்படும் மாற்றத்தை கண்டு நீங்களே அதிசயத்துப் போவீர்கள்.
உங்களுடைய உணவில் ஒரு வார காலத்திற்கு சர்க்கரையை சேர்க்காமல் இருந்தால் கிடைக்கும் பலன்கள் என்ன? முதலில், சர்க்கரை மீது உங்களுக்கு இருக்கும் ஆசை கணிசமாக குறையும். அதிகமாக சர்க்கரை சாப்பிட வேண்டும் என்ற ஹார்மோன் தூண்டுதல் குறைக்கப்படுவதால், இனிப்பு பதார்த்தங்கள் மீது அதிகமாக நாட்டம் கொள்ளமாட்டீர்கள்.
ஒரு வாரம் சர்க்கரையை சேர்க்காமல் இருப்பதால் கிடைக்கும் உடனடி பலன் என்றால், பசியின்மையை நிலைப்படுத்தும். சர்க்கரை சேர்ப்பதால்தான் உங்களுக்கு அடிக்கடி பசி ஏற்படுகிறது. எனவே சர்க்கரை சேர்க்காததால், உங்கள் உடலின் ஆற்றல் குறையாமல் இருக்கும். இதனால் உணவுக்குப் பின் வழக்கமாக ஏற்படும் உண்ட மயக்கமும் இருக்காது. இதன் காரணமாக நாள் முழுவதும் உற்சாகமாக இருப்பீர்கள்.
மேலும் சர்க்கரை சேர்க்காமல் இருப்பதால் உடல் எடையும் கொழுப்பும் குறையும். உங்கள் உடலில் கோர்த்துள்ள நீரின் எடை குறைந்து கொழுப்பின் அளவு குறைவதை நீங்களே கண்கூடாக பார்க்கலாம். இதன் மூலம் உங்களின் பழைய உடலமைப்பை மீட்டெடுக்கலாம்.
உடலியல் மாற்றங்களை தவிர்த்து மனதளவில் ஏற்படும் மாற்றங்களையும் நாம் முக்கியமாக பார்க்க வேண்டும். உணவில் சர்க்கரை சேர்க்கப்படாததால், உங்களின் அறிவாற்றல் விரிவடைகிறது. இதனால் உங்கள் மனநிலை தடுமாற்றம் இல்லாமல் இருக்கிறது. எதிலும் கவனம் சிதறாமல் இருக்க முடிகிறது. இதெல்லாம் எப்படி சாத்தியம் என்றால் உங்கள் டயட்டில் சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரையை சேர்க்காமல் இருப்பதால்தான் என்பதை புரிந்து கொள்ளுங்கள். இதுமடுமின்றி உங்கள் சருமம் பளபளப்பாகிறது. முகப்பரு குறைகிறது.
இப்படி உணவில் சர்க்கரையை சேர்க்காமல் இருப்பதால் கிடைக்கும் நன்மைகளை சொல்லிக்கொண்டே போகலாம். நமது உடலில் ஏற்படக்கூடிய அசௌகரியங்கள் குறைகின்றன. உதாரணமாக வீக்கம் குறைகிறது. தசைகளில் ஏற்படக் கூடிய வலியும் விறைப்புத்தன்மையும் குறைகிறது. இதனால் தினசரி பணிகளை எந்தவித சிரமும் இல்லாமல் செய்ய முடிகிறது.
உணவில் சர்க்கரையை சேர்க்காமல் இருப்பதால் இவ்வுளவு நன்மைகள் கிடைக்கிறது. உங்கள் உடலின் செயல்பாடு மாற்றமடைகிறது. கொழுப்பை முக்கிய எரிபொருளாக பயன்படுத்தும் நொதிகள் உடலில் உருவாகின்றன. இந்த மாற்றம் தமணியில் உள்ள வீக்கத்தை குறைக்க உதவுகிறது. இதன் மூலம் இதய நலன் மேம்படுவதோடு மூளை செல்களின் வளர்ச்சியும் ஊட்டமும் பெறுகின்றன.