Paristamil Navigation Paristamil advert login

சார்ஜாவில் புத்தாண்டுக்கு பட்டாசு வெடிக்க தடை விதிப்பு

சார்ஜாவில் புத்தாண்டுக்கு பட்டாசு வெடிக்க தடை விதிப்பு

28 மார்கழி 2023 வியாழன் 05:16 | பார்வைகள் : 1678


ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தின் சார்ஜாவில் புத்தாண்டுக்கு பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக செவ்வாய்க்கிழமை பொலிஸார் அறிவிப்பு விடுத்துள்ளனர். 

விதியை மீறுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும், அனைத்து நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

இது போரினால் பாதிக்கப்பட்ட காஸாவிலுள்ள பாலஸ்தீனியர்களுக்கு ஒற்றுமையை வெளிப்படுத்த எடுக்கப்பட்ட தீர்மானம் என அதிகாரிகள்  என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காஸா பகுதியில் இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே போர் நடந்து வரும் நிலையில் 20,000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். 

அவர்களில் எழுபது சதவீதம் பேர் பெண்கள் மற்றும் குழந்தைகள் என நம்பப்படுகிறது.

இதேவேளை, ஹமாஸை அழிக்கும் வரை "அமைதி இருக்காது" என்று இஸ்ரேல் அண்மையில் கூறியதால் உயிரிழப்புகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

யுத்த நிறுத்தம் நிறைவுக்கு வந்த பின்னர் இஸ்ரேல் இராணுவம் காஸாவின் தென் பகுதியில் தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது.

முற்றுகையிடப்பட்ட பிரதேசத்தினுள் மனிதாபிமான நெருக்கடிகள் காரணமாக யுத்த நிறுத்தத்திற்கான அழைப்புகள் அதிகரித்துள்ளன.

காஸாவில் இதுவரை 2.4 மில்லியன் மக்கள் தண்ணீர், உணவு, எரிபொருள் மற்றும் மருந்து பற்றாக்குறையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

குறைந்த அளவிலான உதவிகள் மட்டுமே எல்லைக்குள் செல்கின்றன. 1.9 மில்லியன் காஸா மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்