Paristamil Navigation Paristamil advert login

 மூதாட்டியை தலையில் தாக்கிய மருத்துவரால் பரபரப்பு

 மூதாட்டியை தலையில் தாக்கிய மருத்துவரால் பரபரப்பு

28 மார்கழி 2023 வியாழன் 05:44 | பார்வைகள் : 2685


சீனாவில் கண் அறுவை சிகிச்சையின் போது நோயாளியான 82 வயது மூதாட்டியை மருத்துவர் தலையில் தாக்கிய வீடியோ இணையத்தில் வேகமாக பரவி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவில் கண் அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் 82 வயது மூதாட்டி அனுமதிக்கப்பட்டுள்ளார். 

இதையடுத்து அறுவை சிகிச்சையின் போது மரத்து போக கூடிய மயக்க மருந்தை மூதாட்டிக்கு செலுத்தியுள்ளனர்.

ஆனால் மூதாட்டிக்கு மயக்கம் முழுமையாக வராத காரணத்தால் கண்களையும், தலையையும் தொடர்ந்து அசைத்து கொண்டு இருந்துள்ளார்.

அந்த நேரத்தில் மருத்துவர் தெரிவித்த எச்சரிக்கையையும் மூதாட்டிக்கு புரிந்து கொள்ளாமல் இருந்துள்ளார்.

இதனால் கோபமடைந்த மருத்தவர் மூதாட்டியின் தலையில் மூன்று முறை தாக்கியுள்ளார்.

இந்த சம்பவம் 2019 ஆண்டு சீனாவின் குய்காங் பகுதியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் நடந்துள்ளது.

மூதாட்டியை மருத்துவர் தாக்கிய சம்பவம் சிசிடிவி காட்சிகளில் இடம் பெற்றுள்ளது.

சமீபத்தில் சீனாவில் கொவிட் பரவ தொடங்கிய போது மக்களுக்கு எச்சரிக்கை செய்வதற்காக மருத்துவர் அய்ஃபென் இந்த வீடியோவை இணைய தளத்தில் பகிர்ந்துள்ளார்.

இது சீனா முழுவதும் பரவி வைரலான நிலையில் பாதிக்கப்பட்ட மூதாட்டிக்கு, மருத்துவமனையின் தாய் நிறுவனமான ஏய்ர் சீனா (Aier China) மன்னிப்பு கேட்டுள்ளது.

அத்துடன் மருத்துவமனை நிர்வாகம் சார்பாக மூதாட்டிக்கு 500 யுவான் நிவாரணமும் வழங்கியுள்ளது.

மேலும் அந்த சம்பவத்தில் தொடர்புடைய மருத்துவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டு இருப்பதோடு மருத்துவமனை சிஇஓவையும் பணி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது. 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்