Paristamil Navigation Paristamil advert login

மனிதக் கழிவில் விமான எரிபொருள்- பிரித்தானிய அறிவியலாளர்கள் சாதனை

மனிதக் கழிவில் விமான எரிபொருள்- பிரித்தானிய அறிவியலாளர்கள் சாதனை

28 மார்கழி 2023 வியாழன் 06:44 | பார்வைகள் : 3005


மனிதக் கழிவிலிருந்து விமான எரிபொருளை உருவாக்கி  பிரித்தானிய அறிவியலாளர்கள் சாதனை படைத்துள்ளார்கள்.

பிரித்தானிய விமான நிறுவனம் ஒன்று, மனிதக் கழிவிலிருந்து விமான எரிபொருள் ஒன்றை உருவாக்கியுள்ளது. 

Gloucestershireஇல் அமைந்துள்ள ஆய்வகம் ஒன்றில் அறிவியலாளர்கள் மனிதக் கழிவிலிருந்து விமானங்களை இயக்க உதவும் மண்ணெண்ணெயை உருவாக்கியுள்ளார்கள்.

Firefly Green Fuels என்னும் அந்த நிறுவனத்தின் முதன்மைச் செயல் அதிகாரியான ஜேம்ஸ் (James Hygate), எளிதில், அதிகம் கிடைக்கும் ஒரு கச்சாப்பொருளிலிருந்து எரிபொருள் ஒன்றை உருவாக்க விரும்பினோம், மனிதக் கழிவுதான் எக்கச்சக்கமாக கிடைக்கிறதே, அதையே பயன்படுத்தி எரிபொருளை உருவாக்க திட்டமிட்டோம் என்கிறார்.

லண்டன் இம்பீரியல் கல்லூரி அறிவியலாளரான Dr செர்கியோ லிமா (Dr Sergio Lima) என்பவருடன் இணைந்து எரிபொருளை உருவாக்கும் முயற்சிகளைத் துவங்கியுள்ளார் ஜேம்ஸ். லிமாவும் Firefly Green Fuels நிறுவனத்தில் ஆய்வு இயக்குநராக பணியாற்றி வருகிறார்.

மனிதக் கழிவிலிருந்து உருவாக்கப்பட்ட மண்ணெண்ணெயை பரிசோதித்தபோது, அது அப்படியே மண்ணெண்ணெயைப் போல செயல்பட்டதுமட்டுமல்ல, சாதாரண விமான எரிபொருளைவிட அது 90 சதவிகிதம் குறைவான கார்பன் வாயுக்களையே வெளியேற்றியதும் ஆச்சரியத்தை உருவாக்கியது.

தற்போது, அந்த எரிபொருள், அதாவது, உயிரி மண்ணெண்ணெய், ஜேர்மனியிலுள்ள விமான ஆய்வு மையத்தில் ஆய்வுக்குட்படுத்தப்பட்டுவருகிறது.

மேலும், பிரித்தானிய ஆய்வு மையங்களும் அந்த எரிபொருள் தொடர் சோதனைகளை மேற்கொள்ள இருக்கின்றன. 

பரிசோதனைகளின் முதற்கட்ட முடிவுகள், அந்த உயிரி மண்ணெண்ணெய் விமான எரிபொருளைப்போலவே செயல்படுவதாக தெரிவித்துள்ளன.

இந்த ஆய்வு வெற்றிகரமாக முடியுமானால், மனிதக் கழிவிலிருந்து, பிரித்தானியாவின் விமான எரிபொருள் தேவையில் 5 சதவிகிதம் சந்திக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்