அஜர்பைஜானைச் சேர்ந்த இருவர் பிரான்சிலிருந்து வெளியேற்றம்!
28 மார்கழி 2023 வியாழன் 07:17 | பார்வைகள் : 4078
பிரான்சில் வசித்த அஜர்பைஜானைச் சேர்ந்த இருவர் நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.
அஜர்பையான் என்பது ஒரு ஆசிய நாடு. அருகில் உள்ள ஆர்மேனியாவுடன் யுத்தத்தில் ஈடுபட்டு வருகிறது. Nagorno-Karabakh எனும் பிராந்தியம் ஒன்றுக்கு உரிமை கோரி இந்த யுத்தம் இடம்பெற்று வருகிறது. இந்த யுத்தத்தில் பிரான்ஸ் ஆர்மேனியாவின் பக்கம் நிற்கிறது. அண்மையில் அந்நாட்டுக்கு ஆயுதங்களும் வழங்கியது. அதையடுத்து அஜர்பையான் அரசு பிரான்சை கடுமையாக விமர்சித்து வருகிறது.
இந்த சர்ச்சைகளுக்கு இடையே, பிரான்சில் வசித்த அஜர்பையானைச் சேர்ந்த இருவர் நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டதாக பிரான்சின் வெளியுறவுத்துறை அமைச்சகம் நேற்று டிசம்பர் 27, புதன்கிழமை அறிவித்துள்ளது.
“அவர்களின் பொருத்தமில்லாத செயற்பாடுகளின்” காரணமாக வெளியேற்றப்பட்டதாக அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏனைய பெயர் விபரங்கள் எதுவும் குறிப்பிடப்படவில்லை.