பிரித்தானியாவில் அறிமுகமாகும் சாரதி இல்லாத கார்கள்!
28 மார்கழி 2023 வியாழன் 08:50 | பார்வைகள் : 2440
பிரித்தானியாவில் 2026 ஆம் ஆண்டு இறுதிக்குள் சில இடங்களில் சாரதி இல்லாத கார்கள் பாவனைக்கு வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
பிரித்தானியா போக்குவரத்து அமைச்சின் செயலாளர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
அந்த ஆண்டின் இறுதிக்குள் வாகனங்களின் உரிமையாளர்கள் பயணங்களை மேற்கொள்ள கூடியதாக இருக்கும் என்றும் போக்குவரத்து அமைச்சின் செயலாளர் மார்க் ஹார்பர் தெரிவித்துள்ளார்.
பிரித்தானியாவில் தானியங்கி கார்களை கொண்டுவருவதற்கான புதிய சட்டத்தை அரசாங்கம் கடந்த மாதம் அறிவித்தது.
தொழில்நுட்ப பிரச்சினை மற்றும் விபத்துகள் ஏற்படும் என விமர்சனங்கள் எழுந்தன.
இந்நிலையில் கலிபோர்னியாவில் குறித்த தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுவதை நேரில் பார்த்ததாக போக்குவரத்து அமைச்சின் செயலாளர் மார்க் ஹார்பர் தெரிவித்துள்ளார்.
ஆகவே நாடாளுமன்றில் சட்டமூலம் முன்வைக்கப்பட்டுள்ளது என்றும் 2024 ஆம் ஆண்டின் இறுதிக்குள் பாராளுமன்றம் மூலம் அனுமதி கிடைக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.