ஜப்பான் உடனான உறவுகளில் கடுமையான விளைவுகள் ஏற்படும் - ரஷ்யா எச்சரிக்கை
28 மார்கழி 2023 வியாழன் 09:14 | பார்வைகள் : 2981
உக்ரைனுக்கு வான் பாதுகாப்பு அமைப்புகளை வழங்க ஜப்பான் எடுத்துள்ள நடவடிக்கை ரஷ்யா-ஜப்பான் உறவுகளில் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என ரஷ்ய வெளிவிவகார அமைச்சு எச்சரித்துள்ளது.
2022 பெப்ரவரியில் ரஷ்யா பல்லாயிரக்கணக்கான துருப்புக்களை உக்ரைனுக்குள் அனுப்பியதில் இருந்து மொஸ்கோவிற்கும் டோக்கியோவிற்கும் இடையிலான உறவுகள் விரிச்சலடைந்துள்ளன.
இதனை தொடர்ந்து ஜப்பான் அதன் மேற்கத்திய நட்பு நாடுகளுடன் இணைந்து ரஷ்யா மீது கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது.
இந்நிலையில் உக்ரைனுக்கு வான் பாதுகாப்பு அமைப்பை ஜப்பான் வழங்கியதை விரோத செயலாக கருதும் ரஷ்யா, இதன் காரணமாக ஜப்பான் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என ரஷ்யா எச்சரித்துள்ளது.