Paristamil Navigation Paristamil advert login

ஒலிம்பிக் ஆரம்ப நிகழ்வு : தங்குமிடங்களின் விலை பல மடங்காக அதிகரிக்கும் அபாயம்!

ஒலிம்பிக் ஆரம்ப நிகழ்வு : தங்குமிடங்களின் விலை பல மடங்காக அதிகரிக்கும் அபாயம்!

28 மார்கழி 2023 வியாழன் 09:23 | பார்வைகள் : 7391


ஒலிம்பிக் போட்டிகள் வரும் ஜூலை 26 ஆம் திகதி ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அன்றைய நாளில் பரிசில் உள்ள தங்குமிடங்களில் கட்டணங்கள் பல மடங்காக அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சராசரியாக 1,033 யூரோக்கள் L'HÔTEL கட்டணமாக செலுத்த நேரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரான்சின் விற்பனையாகும் பொருட்களின் தரத்தை ஆராயும் UFC-Que Choisir எனும் நிறுவனம் இந்த விலை அதிகரிப்பை கண்டித்துள்ளது. குறித்த நிறுவனமே ஆய்வு மேற்கொண்டு குறித்த தகவலையும் வெளியிட்டுள்ளது.

பரிசில் உள்ள முக்கியமான 80 தங்குமிடங்களை ஆராய்ந்ததில், தங்குமிட கட்டணம் 20% தொடக்கம் 226% சதவீதம் வரை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சராசரியாக 121% சதவீத கட்டண உயர்வு எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

317 யூரோக்களில் இருந்து 867 யூரோக்கள் வரையும், அதிகபட்சமாக 1,033 யூரோக்கள் வரையும் சராசரியாக கட்டணமாக செலுத்த நேரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்