Paristamil Navigation Paristamil advert login

கடற்கரைகளில், பூங்காக்களில் புகைப்பிடிக்க தடை! - புதிய சட்டம்!!

கடற்கரைகளில், பூங்காக்களில் புகைப்பிடிக்க தடை! - புதிய சட்டம்!!

28 கார்த்திகை 2023 செவ்வாய் 13:43 | பார்வைகள் : 2863


பிரான்சில் பதிவாகும் மரணங்களில் அதிகளவானது புகைப்பதால் ஏற்படுகிறது. வருடத்துக்கு 75,000 மரணங்கள் புகைத்தலினால் ஏற்படுகிறது. 

பொது இடங்களில் புகைப்பிடிப்பதை தடுக்கும் சட்டம் ஒன்றை பிரான்சின் சுகாதார அமைச்சர் Aurélien Rousseau முன்மொழிந்துள்ளார். கடற்கரைகள், பூங்காக்கள், காடுகள், பொது இடங்களை சிகரெட் புகை அற்ற இடங்களாக மாற்றுவதால் மரணங்களை தவிர்க்க முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.

73 மாவட்டங்களில் 7,200 இடங்களில் இந்த தடை கொண்டுவரப்படுகிறது. இன்று செவ்வாய்க்கிழமை சுகாதார அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்