கொழும்பில் இருந்து யாழ். நோக்கி சென்ற பேருந்து மீது மர்மநபர்கள் தாக்குதல்

28 கார்த்திகை 2023 செவ்வாய் 16:46 | பார்வைகள் : 6044
கொழும்பிலிருந்து வடக்கு நோக்கிப் பயணித்த இரு பேருந்துகள் மீது மர்ம நபர்கள் சிலர் சற்று முன்னர் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
அனுராதபுரம் நொச்சியாகம பொலிஸ் நிலைய எல்லைக்குட்பட்ட புத்தளம் - கொழும்பு வீதியில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கொழும்பிலிருந்து வடக்கு நோக்கி இரவில் பயணித்த தனியார் மற்றும் அரச பேரூந்துகள் மீது மோட்டார் வாகனத்தில் வந்த இனந்தெரியாத நபர்கள் கற்களை வீசி தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.
வடக்கிலிருந்து கொழும்பில் நடைபெற்ற சிக்கனக் கடன் கூட்டுறவுச் சங்கங்களின் தேசிய மாநாட்டில் பங்குபற்றிவிட்டு திரும்பிய பேருந்துகள் மீதே தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வவுனியாவை சேர்ந்த இரு தனியார் பேருந்துகளில் ஒரு பேருந்தும் , யாழ் நோக்கி பயணித்த இலங்கை அரச போக்குவரத்து சபைக்கு சொந்தமான ஒரு பேருந்துமே தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது.
4 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1