ஒன்றாரியோ மாகாணத்தில் மீண்டும் பெருந்தொற்று பரவும் அபாயம்
29 கார்த்திகை 2023 புதன் 06:22 | பார்வைகள் : 2691
ஒன்றாரியோ மாகாணத்தில் மீண்டும் கொவிட்19 பெருந்தொற்று பரவுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஒன்றாரியோவின் கழிவு நீரை ஆய்வுக்கு உட்படுத்தியதன் மூலம் கொவிட் பரவுகை குறித்து கண்டறியப்பட்டுள்ளது.
சுமார் ஒரு ஆண்டு காலமாக மாகாணத்தில் இல்லாத அளவிற்கு தற்பொழுது கோவிட் பரவுகை அதிகரித்துள்ளது.
கடந்த ஒரு மாத கால இடைவெளிளியில் கழிவு நீரில் கொவிட் தொற்று குறித்த குறிகாட்டிகள் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளன.
குளிர்காலத்துடன் கழிவு நீர் தவிர்ந்த ஏனைய குறிகாட்டிகளின் மூலமும் வைரஸ் தொற்று குறித்து தகவல்கள் கண்டறியப்பட்டுள்ளன.