இலங்கையில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுடன் விபத்துக்குள்ளான பேருந்து

29 கார்த்திகை 2023 புதன் 06:57 | பார்வைகள் : 9555
வஸ்கடுவ பகுதியில் உள்ள பாதுகாப்பற்ற புகையிரத கடவையை கடக்க முற்பட்ட போது சுற்றுலாப் பயணிகள் குழு ஒன்றை ஏற்றிச் சென்ற பேருந்து ரயிலுடன் மோதி விபத்து சம்பவம் ஒன்று இன்று (29) காலை இடம்பெற்றுள்ளது.
இவ்விபத்தில் சுற்றுலா பயணிகள் இருவர் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக களுத்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்தனர்.
கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற பேரூந்தே இவ்வாறு விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அளுத்கமவில் இருந்து ஹலவத்தை நோக்கி பயணித்த ரயிலுடனேயே இந்த விபத்து நேர்ந்துள்ளது.
செக் குடியரசிற்குச் செல்லவிருந்த சுற்றுலாப் பயணிகளை ஒரு ஹோட்டலில் இருந்து ஏற்றிக்கொண்டு, மற்றுமொரு ஹோட்டலில் இருந்த சுற்றுலாப் பயணிகளையும் ஏற்றிச் சென்ற போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இரவு 9 மணி அளவில் புறப்படவிருந்த விமானத்தில் பயணிக்க இருந்த சுற்றுலாப் பயணிகளே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விபத்தில் பேருந்தின் பின்பகுதி பலத்த சேதமடைந்ததுடன், ரயிலும் சேதமடைந்ததுள்ளது.
மேலும் புகையிரத சாரதிக்கு கண்ணில் சிறு காயங்களுக்குள்ளான நிலையில் களுத்துறை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025