லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் உருவாகும் படத்தில் ஹீரோ இவரா?
29 கார்த்திகை 2023 புதன் 08:41 | பார்வைகள் : 6430
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தயாரிப்பு நிறுவனம் தொடங்கியுள்ள நிலையில், அவர் தயாரிப்பில் உருவாகும் முதல் படம் குறித்தான அப்டேட் வெளியாகியுள்ளது. மேலும், அவர் தயாரிப்பில் யார் ஹீரோ என்பதும் ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.
’மாநகரம்’, ‘கைதி’, ‘மாஸ்டர்’, ‘விக்ரம்’, ‘லியோ’ என ஹிட் படங்களைக் கொடுத்தவர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். தற்போது ரஜியின் 171வது படத்திற்கான திரைக்கதைப் பணியில் இவர் பிஸியாக இருக்கிறார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் தயாரிப்பு நிறுவனம் தொடங்கியது குறித்தான அறிவிப்பை வெளியிட்டார். ஜி ஸ்குவாட் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த நிறுவனத்தில் இளம் திறமை மற்றும் தனது உதவி இயக்குநர்களது கதைகளைத் தயாரிப்பேன் என்றும் தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில், ஜி ஸ்குவாடின் முதல் தயாரிப்பு குறித்தான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ’உறியடி’ படம் மூலம் கவனம் ஈர்த்த நடிகரும், இயக்குநருமான விஜயகுமார் தான் இந்தப் படத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் முதல் பார்வை இன்று மாலை 6 மணி அளவில் வெளியாக உள்ளதாக புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளனர். இந்த படத்தை இயக்குநர் அப்பாஸ் இயக்க உள்ளார்.
கோவிந்த் வசந்தா இசையில், லியோன் பிரிட்டோ இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய உள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. லோகேஷின் இந்த புதிய தொடக்கத்திற்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.


























Bons Plans
Annuaire
Scan