நடிகர் விஜயகாந்த் உடல்நிலை குறித்து மருத்துவமனை அறிக்கை!

29 கார்த்திகை 2023 புதன் 08:46 | பார்வைகள் : 4995
நடிகர் விஜயகாந்த் உடல்நிலை, கடந்த 24 மணி நேரத்தில் சீரான நிலையில் இல்லாததால் அவருக்கு நுரையீரல் சிகிச்சைக்கான உதவி தேவைப்படுகிறது என்றும், இன்னும் 14 நாட்கள் மருத்துவமனையில் விஜயகாந்துக்கு மருத்துவமனையில் தொடர் சிகிச்சை தேவைப்படுகிறது என்று மியாட் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது தொண்டர்களை பதற்றமடைய செய்துள்ளது.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் நவம்பர் 18ம் தேதி இரவு உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். வழக்கமான மருத்துவப் பரிசோதனைக்காக சென்றுள்ளதாக தேமுதிக தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நடிகர் விஜயகாந்துக்கு அவ்வப்போது செயற்கை சுவாசம் அளிக்கப்படுவதாகவும் கூறப்பட்டது.