நீண்ட நாள் ஒற்றைத் தலைவலிக்கு ஒரே தீர்வு 'Vydura' புதிய மாத்திரைகள்.
29 கார்த்திகை 2023 புதன் 09:07 | பார்வைகள் : 3678
10 மில்லியன் மக்கள் பிரான்சில் ஒற்றை தலைவலி நோயால் அவதிப்படுகின்றனர். இதயத் துடிப்பு தலையில் துடிப்பது போல் ஓயாது மிகக் கடுமையாக ஏற்படும் தலைவலி, ஒரு சிலருக்கு சில மணிநேரங்களும், ஒரு சிலருக்கு 72 மணித்தியாலங்கள் கடந்தும், தொடர்ந்தும், அடிக்கடி ஏற்படும்.
நரம்பியல் கோளாறுகள், பார்வைக் கோளாறுகள் எற்படுவதற்கான
முன் எச்சரிக்கையாகவும் இது ஏற்படலாம். சத்தம், ஒளி அல்லது நாற்றங்களை சுவாசித்தல் இந்த தலைவலியை அதிகமாகுக்ம். குறித்த தலைவலிக்கு கூடுதலாக மருத்துவர்கள் இதுவரை l’ibuprofène அல்லது triptans போன்ற மாத்திரைகளையே பரிந்துரைப்பார்கள்.
'migraineuses' என்று அழைக்கப்படும் இந்த ஒற்றை தலைவலி உள்ளவர்களில் 30 முதல் 40% சதவீதமானவர்களுக்கு மேற்குறிப்பிட்ட இரண்டு மாத்திரைகளும் சரியான நிவரணியை தருவதில்லை.
ஒரு நல்ல செய்தி என்னவென்றால், அக்டோபர் 10 முதல், மருந்தகங்களில் ஒரு புதிய சிகிச்சை கிடைக்கிறது. அதுதான் 'Vydura' "இந்த வாய்வழி மருந்து ஒற்றைத் தலைவலி தாக்குதல்களுக்கு சிகிச்சையளிப்பதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது, ஒற்றைத் தலைவலிக்கான தடுப்பு சிகிச்சையாகவும் உள்ளது.
Pfizer ஆய்வகம் தயாரித்துள்ள மேற்குறிப்பிட்ட மாத்திரைகள் அடங்கிய ஒரு பெட்டியின் விலை ஏறத்தாழ 25 யூரோக்கள். குறித்த மாத்திரைகளின் மேலதிக ஆய்வறிக்கைகளை Assurance-maladie கேட்டுள்ளது, ஆய்வறிக்கைகளை. Assurance-maladie ஆராய்ந்த பின்னரே இதற்கான தமது கொடுப்பனவை வழங்கும், அதுவரை நீங்கள் தான் முழுப் பணத்தையும் செலுத்த வேண்டும்.