பொது இடங்களில் புகைப்பிடிக்க தடை. மீறினால் அபராதம். சுகாதார அமைச்சு.
29 கார்த்திகை 2023 புதன் 09:08 | பார்வைகள் : 5422
2023 - 2027 காலகட்டத்திற்கான தேசிய புகைப்பிடித்தலுக்கு எதிரான திட்டங்கள் நேற்று (28/11) சுகாதார அமைச்சரால் அறிவிக்கப்பட்டது.
பிரான்சில் ஆண்டுதோறும் புகைப்பிடிப்பதால் சுமார் 75.000 இறப்புகள் சம்பவிக்கிறது. இந்த இறப்புகளை குறைக்க அரசு நீண்டகாலமாக பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருந்தும் சுமார் 12 மில்லியன் மக்கள் தொடர்ந்தும் புகைப்பிடித்து வருகிறார்கள்.
இந்த தொகையினரை கட்டுப்படுத்த அடுத்து வரும் ஆண்டுகளில் புதிய பல திட்டங்கள் வரவிருக்கிறது. அதன் முதல் கட்டமாக சிகரெட் பெட்டிளின் விலையை அதிகரிக்கும் அதேவேளை, ஏற்கனவே இருக்கும் 'பொது இடங்களில் புகைப்பிடிக்க தடை' பிரதேசங்களை விரிவுபடுத்த முடிவுசெய்யப்பட்டுள்ளது.
இனிவரும் காலங்களில் கடற்கரைகள், பூங்காக்கள், பாடசாலைகளின் முற்றங்கள், என பொதுமக்கள் கூடும் இடங்கள் அனைத்தும் புகைப்பிடிக்க தடை'விதிக்கப்பட்ட இடங்களாக அறிவிக்கப்படவுள்ளது. மீறினால் தண்டனைக்குரிய குற்றமாக அபராதம் விதிக்கப்படவும் உள்ளது.