Paristamil Navigation Paristamil advert login

அமெரிக்காவில் உருவாகும் உலகின் நீண்ட கால நினைவுச் சின்னம்!

அமெரிக்காவில் உருவாகும் உலகின் நீண்ட கால நினைவுச் சின்னம்!

29 கார்த்திகை 2023 புதன் 10:01 | பார்வைகள் : 1797


அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள சியரா டையப்லோ மலையில் அமேசான் நிறுவனத்தின் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் அவருக்கு சொந்தமான இடத்தில் 500 அடி உயரம் கொண்ட கடிகாரத்தை உருவாக்கி வருகின்றார்.

உலகின் பணக்காரர்கள் வரிசையில் மூன்றாவது இடத்தில் இருக்கும் ஜெஃப் பெசோஸ், 10,000 ஆண்டுகள் ஓடக்கூடிய கடிகாரத்தை உருவாக்கும் பணியில் தீவிரம் காட்டி வருகிறார்.

கடந்த 2011 ஆண்டு முதல் இந்த கடிகாரத்தை உருவாக்குவதற்கு அவர் நிதி வழங்கி வருகிறார். இந்த கடிகாரத்திற்கு Clock of the Long என பெயரிட்டுள்ளனர். இந்த கடிகாரத்திற்கான திட்டத்தை தீட்டியவர் டேனி ஹில்லிஸ் என்பவர்.

இந்த கடிகாரத்தை உருவாக்கும் திட்டத்திற்கு ஜெஃப் பெசோஸ், இதுவரை 42 மில்லியன் டொலர்களை செலவிட்டுள்ளார்.

மேலும், இந்த கடிகாரத்தின் நொடிமுள் ஒரு ஆண்டிற்கு ஒரு முறை மட்டுமே நகரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது ஒரு வருடம் என்பது ஒரு நொடியாக அளவிடப்படுவதாக ஜெஃப் பெசோஸ், தெரிவித்துள்ளார்.

இந்த மணியளவின் படி இந்த கடிகாரம் 10,000 ஆண்டுகளுக்கு இயங்கப்போவதாகக் கூறியுள்ளார்.

ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த கடிகாரம் ஒலி எழுப்பும் எனவும் கூறப்பட்டுள்ளது.

இது நீண்டகால சிந்தனைக்கான நினைவுச்சின்னமாக உருவாக்கப்படுவதாக கூறப்படுகிறது.

இன்னும் 10,000 ஆண்டுகள் மனிதர்களால் பூமியில் வாழ முடியுமா என எழும் கேள்விகளுக்கு அந்த நம்பிக்கையை விதைக்கும் நோக்கமே இந்த கடிகாரம் என அந்நிறுவனம் தனது வலைத்தள பக்கத்தில் பதிலளித்துள்ளது.

இந்த கடிகாரத்தின் முதல் ஒலி இன்னும் 1000 ஆண்டுகளுக்கு பின்னரே கேட்கும் என்ற நிலையில், அதனை கேட்கப்போகும் உயிர்களை உருவாக்கும் உயிர்கள் கூட இன்னும் உருவாகவில்லை என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்