பல்வேறு வசதிகளுடன் கூடிய 15 ஆம் இலக்க மெற்றோ! - முதன்முதலாக வெளியிடப்பட்ட புகைப்படங்கள்!!

29 கார்த்திகை 2023 புதன் 14:23 | பார்வைகள் : 10800
15 ஆம் இலக்க மெற்றோ தொடருந்துகளுக்கான பணிகள் துரிதகதியில் உருவாக்கப்பட்டு வருகின்றது. 2025 ஆம் ஆண்டில் இருந்து 2030 ஆம் ஆண்டுக்குள் இந்த தொடருந்துகள் சேவைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டுள்ள நிலையில், இன்று முதன்முதலாக அவற்றின் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
நவிகோ அட்டையில் உள்ள மெல்லியன் நீல நிறத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த மெற்றோ முழுக்க முழுக்க தானியங்கி சேவையாகும். உள்ளே நீல நிறத்திலும், சிவப்பு நிறத்திலும் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. அத்தோடு WiFi வசதியுடனும் தயாராகி வருகிறது.
200 கி.மீ தூரம் பயணிக்கும் குறித்த மெற்றோ மொத்தமாக 68 தரிப்பிடங்களில் நிற்கும்.
2025 ஆம் ஆண்டுக்குள் தரிப்பிடங்கள், தண்டவாளங்கள் உருவாக்கப்பட்டு சேவைக்கு விடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025