’ஆற்றுப்படுத்த முடியாத இழப்பு!’ - Gérard Collomb இன் அஞ்சலி நிகழ்வில் ஜனாதிபதி மக்ரோன்!!
29 கார்த்திகை 2023 புதன் 14:53 | பார்வைகள் : 10097
லியோனின் முன்னாள் நகரபிதா Gérard Collombஇன் அஞ்சலி நிகழ்வில் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் கலந்துகொண்டார். லியோனில் உள்ள Saint-Jean தேவாலயத்தில் இன்று முற்பகல் 11 மணி அளவில் இந்த அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது.

ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோனின் அரசியல் வாழ்க்கையில் பெரும் திருப்புமுனையாக அமைந்த Gérard Collomb, நவம்பர் 25 ஆம் திகதி தனது 76 ஆவது வயதில் மரணமடைந்திருந்தார். அவரது இறுதி அஞ்சலி நிகழ்வு இன்று நவம்பர் 29 ஆம் திகதி இடம்பெற்றிருந்தது.
’லியோன் மக்களின் வாழ்க்கையை மெருகேற்றினீர்கள். லியோனின் அடையாளமாக மாறியுள்ளீர்கள். நீங்களே லியோன்’ என குறிப்பிட்ட ஜனாதிபதி மக்ரோன், ”உங்களிடம் கடன்பட்ட அனைத்தையும் நான் அறிவேன். உங்கள் ஆன்மாவின் வலிமை, உரையாடல்கள், உங்கள் ரசனை, நட்பு அனைத்தையும் என்றும் நினைவில் கொள்வேன்!” என மிக உருக்கமாக தெரிவித்தார்.
”உங்களது இழப்பு ஆற்றுப்படுத்த முடியாதது!” எனவும் ஜனாதிபதி மக்ரோன் தெரிவித்தார்.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan