கனமழை: களத்திற்கு செல்ல அமைச்சர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவு
29 கார்த்திகை 2023 புதன் 16:00 | பார்வைகள் : 2810
சென்னையில் தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் அமைச்சர்கள் எம்.எல்.ஏ.,க்கள் உடனடியாக களத்திற்கு சென்று பணியாற்ற வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சென்னையின் மீது வானத்தில் மேகத்திரட்சி ஏற்பட்டுள்ளதால் அடுத்த இரண்டு மணி நேரத்தில் சென்னையில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனையடுத்து கனமழை பெய்து வருவதால் அமைச்சர்கள் எம்.எல்.ஏக்கள் உடனடியாக களத்திற்கு சென்று பணியாற்ற வேண்டும். பொதுமக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மேற்கொள்ளுமாறு முதல்வர் ஸ்டாலின் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்களுக்கு அறிவுறுத்தி உள்ளார். மேலும் இரவு முழுவதும் களப்பணியாற்ற வேண்டும் என சென்னை மாநகரட்சி ஊழியர்களுக்கு கமிஷனர் ராதாகிருஷ்ணன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
முன்னதாக சென்னையில் கடந்த 4 மணி நேரத்தில் சராசரியாக 6 செ.மீ.,வரையில் மழை பெய்துள்ளது. ஐந்து இடங்களில் சுமார் 10 செ.மீ மழை பதிவாகி உள்ளது. அதிகபட்சமாக கொளத்தூரில் 14 செ.மீ மழை பதிவாகி உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
சுரங்கபாதை மூடல்
சென்னையில் பெய்து வரும் கனமழையால் பெரம்பூர் சுரங்கப்பாதை மூடப்பட்டது. இதனால் அங்கு மழைநீர் தேங்கியுள்ளது.<br></p><br><p>* கனமழை பெய்து வருவதால், பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் என மாநகராட்சி கமிஷனர் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார்.