Paristamil Navigation Paristamil advert login

டிச., 2,3ல் மிக கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை

 டிச., 2,3ல் மிக கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை

29 கார்த்திகை 2023 புதன் 19:05 | பார்வைகள் : 1749


திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, விழுப்புரம் ஆகிய 5 மாவட்டங்களில் டிச.,2,3ல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது என தென்மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் நிருபர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.

இது குறித்து பாலச்சந்திரன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி நாளை(நவ.,30) தாழ்வு மண்டலமாக மாறும். காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற உள்ளது. தென்மேற்கு வங்கக் கடலில் 70 கி.மீ வரை காற்று வீசக்கூடும். சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிப்புரம், விழுப்புரம் ஆகிய 5 மாவட்டங்களில் டிச.,2,3ல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது.

தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று(நவ.,29) இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அதேபோல், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

நாளை

காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் நாளை ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும்.  என்றார்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்