நீதி அமைச்சர் Éric Dupond-Moretti மீதான வழக்கை நிராகரித்தது நீதிமன்றம்!
29 கார்த்திகை 2023 புதன் 15:26 | பார்வைகள் : 4203
பிரான்சின் நீதி அமைச்சர் (ministre de la Justice) Éric Dupond-Moretti மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு வழக்கை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
அமைச்சர் Éric Dupond-Moretti மீது ‘பதவியை பயன்படுத்தி சட்டவிரோத நலன்களை பெற்றுக்கொண்டார்’ என குற்றம்சாட்டப்பட்டு வழக்கு தொடுக்கப்பட்டது. அதையடுத்து இன்று குடியரசின் நீதிமன்றம் (Cour de justice de la République (CJR)) இந்த வழக்கை நிராகரித்து நீதி அமைச்சர் Éric Dupond-Moretti குற்றமற்றவர் என அறிவித்துள்ளது.
கடந்த 10 நாட்களாக அவர் நீதிமன்ற விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டதன் பின்னர், இன்று புதன்கிழமை பிற்பகல் 3 மணி அளவில் இதனை நீதிமன்றம் அறிவித்தது.
”இதைத்தான் நாங்கள் எதிர்பார்த்தோம். சட்டம் கட்டளையிட்டது இதைத்தான். நீதி அமைச்சரை குற்றமற்றவர் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது!” என நீதி அமைச்சரின் வழக்கறிஞர் Jacqueline Laffont தெரிவித்தார்.