Paristamil Navigation Paristamil advert login

இஸ்ரேல் ஹமாஸ் போர் தவிர்ப்பு மேலும் ஒருநாள் நீடிப்பு

இஸ்ரேல் ஹமாஸ் போர் தவிர்ப்பு மேலும் ஒருநாள் நீடிப்பு

30 கார்த்திகை 2023 வியாழன் 06:52 | பார்வைகள் : 5349


ஹமாசுடனான மோதல் இடைநிறுத்தம் மேலும் ஒருநாள் நீடிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.

பணயக்கைதிகளையும் இஸ்ரேலிய சிறையில் உள்ள பாலஸ்தீனியர்களையும் விடுதலை செய்வதற்கான பேச்சுவார்த்தைகள் தொடரும் நிலையிலேயே இஸ்ரேலிய இராணுவம் இதனை அறிவித்துள்ளது.

பணயக்கைதிகளை விடுதலை செய்வதற்கான முயற்சிகள் இடம்பெறுவதன் காரணமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட விடயங்களின் அடிப்படையில் யுத்தநிறுத்தம் மேலும் ஒருநாள் நீடிக்கப்படுகின்றது என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

புதன்கிழமை இரவு மேலும் 16 பணயக்கைதிகளை விடுதலை செய்துள்ள ஹமாஸ் மோதல் இடைநிறுத்த நீடிப்பை உறுதி செய்துள்ளது.

இதேவேளை அமெரிக்க இராஜாங்க செயலாளர் அன்டனி பிளிங்கென் புதன்கிழமை இஸ்ரேலிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்