Paristamil Navigation Paristamil advert login

2024 ஆம் ஆண்டு ஐந்து தொடர்களில் பங்கேற்கும் இலங்கை அணி!

2024 ஆம் ஆண்டு ஐந்து தொடர்களில் பங்கேற்கும் இலங்கை அணி!

30 கார்த்திகை 2023 வியாழன் 15:04 | பார்வைகள் : 1751


இலங்கை கிரிக்கெட் அணி 2024ஆம் ஆண்டில் விளையாட உள்ள போட்டிகள் குறித்த அட்டவணை வெளியானது. 

உலகக்கோப்பை தொடரில் மோசமான ஆட்டத்திற்கு பின் இலங்கை அணி கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டது.

அதனைத் தொடர்ந்து வாரியத்தின் நடவடிக்கையில் அரசு தலையிட்டதால் ஐசிசியின் தடை விதிப்பிற்கு இலங்கை ஆளானது. 

மேலும், U19 உலகக்கோப்பையை நடத்தும் வாய்ப்பு இலங்கையிடம் இருந்து தென் ஆப்பிரிக்காவுக்கு சென்றது. 

இந்த நிலையில் 2024ஆண்டில் இலங்கை அணி 52 போட்டிகளில் விளையாட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 10 டெஸ்ட், 21 ஒருநாள் மற்றும் 21 டி20 போட்டிகள் அடங்கும். 

2024ஆம் ஆண்டில் தனது முதல் தொடராக ஜிம்பாப்வேயை எதிர்கொள்கிறது இலங்கை. ஜனவரியில் 3 ஒருநாள், 3 டி20 போட்டிகளில் இரு அணிகளும் மோதுகின்றன. சொந்த மண்ணில் ஜிம்பாப்வே அணியை இலங்கை எதிர்கொள்வதால் வெற்றி வாய்ப்பு அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த ஆண்டில் இலங்கை அணி 5 வெளிநாட்டு தொடர்களில் பங்கேற்கிறது. இதற்கான அட்டவணையை இலங்கை கிரிக்கெட் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.  

பெப்ரவரி மாதம் வங்கதேசத்திற்கு பயணம் மேற்கொள்ளும் இலங்கை, உலகக்கோப்பை டி20 தொடருக்காக ஜூன் மாதம் அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகள் செல்கிறது.

அதன் பின்னர் ஆகத்து மாதத்தில் இங்கிலாந்துக்கும், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் முறையே தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து நாடுகளுக்கு சென்று இலங்கை அணி விளையாடுகிறது.


அதே போல் சொந்த மண்ணில் ஜிம்பாப்பே, ஆப்கானிஸ்தான், இந்தியா, நியூசிலாந்து, மேற்கிந்திய தீவுகள், நியூசிலாந்து ஆகிய அணிகளை எதிர்கொள்கிறது.   

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்