WhatsaApp உள்ளிட்ட செயலிகளை பயன்படுத்த - அமைச்சர்களுக்கு தடை!

30 கார்த்திகை 2023 வியாழன் 15:15 | பார்வைகள் : 13737
WhatsApp உள்ளிட்ட தொடர்பு பயன்பாட்டு செயலிகளை பயன்படுத்துவதற்கு பிரெஞ்சு அமைச்சர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
Whatsapp, Messenger, Viber மற்றும் Signal உள்ளிட்ட செயலிகளை பயன்படுத்துவதை தவிர்க்கும் படியும், அதற்கு பதிலாக பிரெஞ்சு தயாரிப்பான Olvid செயலியை பயன்படுத்தும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பாதுகாப்பான பரிமாற்றங்களை உறுதி செய்யும் நோக்கில் இந்த செயலி பரிந்துரைக்கப்பட்டுள்ளது. முன்னதாக அமைச்சர்களிடம் TikTok செயலி பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது மேற்குறித்த செயலிகளும் தடை விதிக்கப்பட்டுள்ளன.
ஜனாதிபதி மக்ரோன் மற்றும் அவர்களது உதவியாளர்கள் Telegram செயலியை பயன்படுத்தி வருகிறமை குறிப்பிடத்தக்கது.
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025
-
1