300 பாலஸ்தீன சிறார்களின் அவல நிலை...
30 கார்த்திகை 2023 வியாழன் 15:15 | பார்வைகள் : 3251
இஸ்ரேல் - ஹமாஸ் போர் நிறுத்த ஒப்பந்தம் மேலும் ஒருநாள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுவரை 180 பாலஸ்தீன மக்கள் இஸ்ரேல் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதுடன் ஹமாஸ் பிடியில் இருந்து 81 பணயக்கைதிகளும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இஸ்ரேல் விடுவிப்பதாக பட்டியலிட்டுள்ள 300 பேர்களில் 90 சதவீதம் 18 வயதும் அதற்கும் குறைவான சிறார்கள் என்றே தகவல் வெளியாகியுள்ளது.
அதில் ஒருவர் 15 வயதான சிறுமி உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
இஸ்ரேல் வெளியிட்டுள்ள குறித்த பட்டியலில் 5 பேர் 14 வயதுடையவர்கள், 6 பேர் 15 வயதுடையவர்கள், 37 பேர்கள் 16 வயதுடையவர்கள், 17 வயதுடைய 76 பேர்களும் 18 வயது நிரம்பிய 146 இளைஞர்களும் இஸ்ரேல் விடுவிக்க தயார் என கூறியுள்ள பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
அத்துடன் இந்த 300 பேர்களில் 33 பேர்கள் பெண்கள். இஸ்ரேல் தரப்பில் இருந்து இதுவரை விடுவிக்கப்பட்ட இளைஞர்கள் அனைவரும் இஸ்ரேல் ராணுவத்தினர் மீது கல் வீசியதாக கைதானவர்களே என கூறப்படுகிறது.
அத்துடன், பயங்கரவாதத்தை ஆதரிப்பது, நெருப்பு வைத்தல் உள்ளிட்ட குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டுள்ளனர்.
இராணுவ நீதிமன்ற விசாரணை முறை தொடங்கிய பின்னர் பாலஸ்தீன மக்களில் ஐந்தில் ஒருவர் ஒரு கட்டத்தில் இஸ்ரேலிய சிறைவாசத்தை அனுபவிக்கும் நிலை ஏற்பட்டது.
தற்போது இஸ்ரேல் விடுவிப்பதாக கூறியுள்ள இந்த 300 பேர்களில் பலரும், எந்த குற்றச்சாட்டில் தாம் கைதாகியுள்ளோம் என்ற தகவலே தெரியாமல் சிறையில் உள்ளனர்.
சிறப்பு சட்டத்தால் விசாரணை ஏதுமின்றி 6 மாதங்கள் வரையில் ஒருவரை சிறை வைக்கலாம்.
ஆனால் ஒக்டோபர் 7ம் திகதிக்கு பின்னர், பாலஸ்தீன கைதிகள் மீது கொடூரமான தாக்குதல்களை முன்னெடுத்துள்ளனர்.
இஸ்ரேல் சிறையில் இருந்து சமீபத்தில் விடுவிக்கப்பட்ட Omaima Bsharat என்ற பெண் தெரிவிக்கையில், மரணத்தின் பிடியில் இருந்து தப்பியது போன்று உணவர்தாக குறிப்பிட்டுள்ளார்.
Mohammed Nazzal என்ற சிறுவனின் இரு கைகளையும் இஸ்ரேல் ராணுவத்தினர் உடைத்து அனுப்பியுள்ளனர்.
வெளியான தரவுகளின் அடிப்படையில், கடந்த 20 ஆண்டுகளில் 10,000 பாலஸ்தீனிய சிறார்கள் இஸ்ரேலிய இராணுவ தடுப்பு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
மேலும், இஸ்ரேலிய இராணுவத்தால் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள பெரும்பாலான பாலஸ்தீனிய சிறார்கள் உடல் மற்றும் உணர்வு ரீதியான துஷ்பிரயோகத்தை எதிர்கொண்டதாகவும் தரவுகளில் அம்பலமாகியுள்ளது.
அக்டோபர் 7ம் திகதிக்கு பின்னர் 200க்கும் அதிகமான பாலஸ்தீன மக்கள் இஸ்ரேல் ராணுவத்தால் அல்லது காஸாவில் குடியேறிய இஸ்ரேலியர்களால் கொல்லப்பட்டுள்ளனர்.
மட்டுமின்றி அக்டோபர் 7ம் திகதிக்கு பின்னர் 3,200 பாலஸ்தீன மக்களை இஸ்ரேல் கைது செய்துள்ளது.
வெளியான தரவுகளின் அடிப்படையில், இஸ்ரேல் சிறையில் தற்போது 8,300 பாலஸ்தீன மக்கள் தண்டனை பெற்று வருவதாக தெரியவந்துள்ளது.