Paristamil Navigation Paristamil advert login

ஹமாஸிடம் மேலும் நான்கு பிரெஞ்சு நபர்கள்! - பெயர் விபரங்கள்!

ஹமாஸிடம் மேலும் நான்கு பிரெஞ்சு நபர்கள்! - பெயர் விபரங்கள்!

1 மார்கழி 2023 வெள்ளி 07:00 | பார்வைகள் : 2255


ஒக்டோபர் 7 ஆம் திகதி ஹமாஸ் அமைப்பினர் மேற்கொண்ட தாக்குதலில் பலர் கொல்லப்பட்டும், பலர் பணயக்கைதிகளாக அழைத்தும் செல்லப்பட்டனர். பயணயக்கைதிகளில் இதுவரை 72 பேரை ஹமாஸ் அமைப்பினர் விடுதலை செய்துள்ளனர். 153 பேர் குறித்த தகவல்கள் இதுவரை இல்லை. அவர்கள் ஹமாஸ் அமைப்பினரிடம் பணயக்கைதிகளாக உள்ளதாக அறிய முடிகிறது. அவர்களில் நான்கு பிரெஞ்சு மக்களும் உள்ளனர்.

Ofer ( வயது 53)

காஸா பகுதிக்கு மிக அருகில் உள்ள Kibbutz Nir Oz பகுதியில் வசித்து வந்த Ofer எனும் 53 வயதுடைய நபர் ஹமாஸ் படையினரின் முதல் நாள் தாக்குதலின் போது அவர் பிடித்துச் செல்லப்பட்டார்.

Ohad (வயது49)

அதே Kibbutz Nir Oz எல்லை நகரில் வசித்த Ohad என்பவரும் ஹமாஸ் அமைப்பினரால் கடத்தப்பட்டுள்ளார். அவரது சகோதரி இது தொடர்பாக தெரிவிக்கையில், “Ohad தனது குடும்பத்தினரை காப்பாற்ற பெரிதும் போராடினர். தனது மனைவியையும் பிள்ளைகளையும் தப்பிச் செல்ல வைத்தார். ஆனா இன்று நாங்களை அவரைத் தொலைத்துள்ளோம்!” என தெரிவித்தார்.

Orion (வயது 32)

Orion என்பவரது விபரங்கள் கிடைக்கவில்லை. அவரது காதலி Shani Louk (வயது 22 - இஸ்ரேல்-ஜெர்மன் குடியுரிமை கொண்டவர்) ஹமாஸ் படையினரால் கொல்லப்பட்டதை அடுத்து, Orion தேடப்பட்டு வருகிறார். ஹமாஸ் படையினரால் அவர் கடத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

Elia (28)

Tribe of Nova எனும் திருவிழாவுக்கு சென்றிருந்தவர்களில் Elia உம் ஒருவர். 250 பேர் ஹமாஸ் அமைப்பினரால் கடத்தப்பட்டிருந்த நிலையில், அவர்களில் இவரும் ஒருவர். “எங்கள் ஐந்து சகோதர்களில் Elia நான்காவது நபர்!” என அவரது சகோதரர் கவலையுடன் தெரிவித்தார்.

கிட்டதட்ட 35 பிரெஞ்சு மக்கள் கொல்லப்பட, காணாமல் போன, நாடு கடந்து அகதிகளாக சென்றவர்கள், சொந்த நாட்டுக்கு திரும்பியவர்கள் போன்றவர்களது விபரங்கள் சேகரிக்கப்பட்ட நிலையில், மேற்குறித்த நாவரது நிலமை குறித்த கவலை தொடர்கிறது.
 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்