Paristamil Navigation Paristamil advert login

கனடாவில் நோய்த் தொற்று பரவும் அபாயம்! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

கனடாவில் நோய்த் தொற்று பரவும் அபாயம்! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

1 மார்கழி 2023 வெள்ளி 08:24 | பார்வைகள் : 7440


கனடவின் அல்பேர்ட்டா மாகாணத்தின் கல்கரியில் தட்டம்மை தொற்று பரவுவதாக  எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அல்பேர்ட்டா சுகாதார சேவை நிறுவனம் இந்தவிடயத்தை அறிவித்துள்ளது.

தட்டம்மை தொற்றுக்கு இலக்கான சிறுமியொருவர் விமானமொன்றில் பயணம் செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

தொற்று பரவுகையுடன் தொடர்புடையவர்கள் பொது இடங்களில் சஞ்சரித்துள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நோய் அறிகுறிகள் தென்படுவோர் பொது இடங்களுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தட்டம்மை நோய் மிகவும் வேகமாக பரவக்கூடிய நோய் தொற்று எனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

வர்த்தக‌ விளம்பரங்கள்