Paristamil Navigation Paristamil advert login

மட்டக்களப்பில் மர்மமான முறையில் சிறுவன் மரணம்

மட்டக்களப்பில் மர்மமான முறையில் சிறுவன் மரணம்

1 மார்கழி 2023 வெள்ளி 08:59 | பார்வைகள் : 5027


மட்டக்களப்பு கொக்குவில் பகுதியை சேர்ந்த ஆனந்ததீபன் தர்சான்ந் எனும் 15 வயது மதிக்கத்தக்க சிறுவன் ஒருவன் கல்முனை சீர்திருத்த பாடசாலையில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக சிறுவனின் தந்தை தெரிவித்துள்ளார்.

கடந்த நவம்பர் 17ஆம் திகதி மணியொன்றை திருடிய குற்றச்சாட்டின் பேரில் கொக்குவில் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட இந்த சிறுவன், நீதிமன்ற உத்தரவின் பிரகாரம், அன்றைய தினமே கல்முனை சீர்திருத்த பாடசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இச்சிறுவன் கடந்த புதன்கிழமை அதிகாலை 3.30 மணிளவில் உயிரிழந்துவிட்டதாக சிறுவனின் குடும்பத்தாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

அதனை தொடர்ந்து, தனது மகனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் மகன் காயங்களுடன் உயிரிழந்துள்ளதாகவும் சிறுவனின் தந்தை தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், சிறுவனின் சடலம் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் சிறுவனது மரணம் தொடர்பான விசாரணை அறிக்கையையும் சட்ட வைத்திய அறிக்கையையும் தங்களுக்கு வழங்க வேண்டும் என்றும் தனது மகனின் மரணத்தில் பல விதமான பொய் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுவதாகவும் சிறுவனின் தந்தை மேலும் தெரிவித்துள்ளார்.

மிகவும் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் சிறுவனின் குடும்பத்தினர், தங்களது பிள்ளைக்கு ஏற்பட்ட நிலை வேறு யாருக்கும் நேரிடக்கூடாது என்றும் தங்களது பிள்ளையின் மரணத்தில் ஒரு நீதியான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.

வர்த்தக‌ விளம்பரங்கள்