இந்தியரை விண்வெளிக்கு அனுப்ப நாசா திட்டம்! சந்திரயான் 3 வெற்றிக்கு பிறகு இஸ்ரோவிற்கு கிடைத்த மகுடம்!
1 மார்கழி 2023 வெள்ளி 09:05 | பார்வைகள் : 1844
நாசா இஸ்ரோ உடன் கூட்டு வைத்து வரும் 2024 ஆம் ஆண்டு இந்திய விண்வெளி வீரர் ஒருவரை சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு அனுப்ப முடிவு செய்துள்ளது. சந்திரயான் 3 வெற்றிக்கு பிறகு இஸ்ரோவுடன் நாசா நெருக்கமாக செயல்பட்டு வருகிறது. அதன் விளைவாக இந்த முடிவை எடுத்துள்ளது.
அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு மையமான நாசா உலகில் மிகப்பெரிய விண்வெளி ஆய்வு மையமாக இருக்கிறது.
மிகப்பெரிய சாதனைகளை எல்லாம் விண்வெளி ஆய்வுத்துறையில் படைத்துள்ளது. இந்நிலையில் தற்போது இஸ்ரோ சந்திரயான் 3 திட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்த நிலையில் நாசா இஸ்ரோ உடன் கூட்டணி வைக்க ஆர்வமாக இருந்து வருகிறது. இதற்காக பல்வேறு நகர்வுகளை செய்து வருகிறது.
இந்நிலையில் நாசாவின் நிர்வாகியான பில் நெல்சன் என்பவர் இந்தியாவிற்கு வந்திருந்தார். இங்கு இஸ்ரோ உடனான சந்திப்பை மேற்கொண்டார். அப்பொழுது அவர் இஸ்ரோ தேர்வு செய்யும் இந்திய நபர் ஒருவரை நாசா சார்பில் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு அனுப்ப நாசா ஆர்வமாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் விண்வெளி ஆய்வில் இரு நாடுகளும் ஒரு நல்ல புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார். இப்படியாக விண்வெளிக்கு அனுப்பும் வீரரை தேர்வு செய்யும் அதிகாரத்தை இஸ்ரோவிற்கு வழங்க நாசா முடிவு செய்துள்ளதாகவும் தெரிவித்தார். அதன்படி இந்தியா விண்வெளிக்கு செல்லும் வீரரின் தகுதியை நிர்ணயம் செய்து இந்திய விண்வெளி ஆய்வுக்கு தேவையான விஷயங்களை மற்றும் முன்னேற்பாடுகளை செய்வதற்காக இது உதவி செய்யும் வகையில் அவர்கள் வீரர்களை தேர்வு செய்யலாம் என தெரிவித்துள்ளார்.
இந்தியாவிற்கு வந்திருந்த நாசாவின் நிர்வாகி பில் நெல்சன் முதலில் மும்பையில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஜிஜேந்திர சிங்கை நேரில் சந்தித்து பேசினார். பின்னர் அங்கிருந்து பெங்களூரு வந்த இவர் அங்கு இஸ்ரோவின் தலைமையகத்துக்கு சென்று அங்கு இஸ்ரோ விஞ்ஞானிகளுடன் பேசினார். மேலும் இவர் இந்தியாவிலிருந்து முதன்முறையாக விண்வெளிக்கு சென்ற விண்வெளி வீரர் ராகேஷ் சர்மா உடன் சந்தித்து பேசினார். இவர் தற்போது நாசா இந்திய விண்வெளி வீரரை சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு அனுப்ப முடிவு செய்துள்ளது குறித்து பேசியது மத்திய அரசு மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கான அடுத்த கட்ட பணிகளை நாசாவும் இந்திய அரசும் சேர்ந்து செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வாய்ப்பை இந்தியா தவறவிடாமல் நாசா உடன் ஒரு நல்ல உறவை பேணிக் காக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சர்வதேச விண்வெளி ஆய்வு மையம் என்பது தற்போது நாசாவின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. இந்தியாவும் தனக்கென தனியாக விண்வெளி ஆய்வு மையத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளது. இதற்காக பாரதிய அந்தரிக்ஷா ஸ்டேஷன் என்ற பெயரில் விண்வெளியில் ஆய்வு மையத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளது. அதன்படி 2025 ஆம் ஆண்டு விண்வெளியில் இந்தியா தனக்கான விண்வெளி ஆய்வு மையத்தை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது மட்டுமல்லாமல் இந்தியா நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தையும் கையில் வைத்துள்ளது.
அதன்படி வரும் 2040 ஆம் ஆண்டு இந்தியாவில் இருந்து விண்வெளிக்கு மனிதர்கள் அனுப்பப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் நாசா தற்போது இந்தியா திட்டமிட்டு வரும் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்காக நாசாவும் உதவ உள்ளதாக தெரிவித்துள்ளது. இந்தியாவின் விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ கடந்த 1975 ஆம் ஆண்டு தான் முதன் முதலில் தனது சாட்டிலைட்டை விண்வெளிக்கு அனுப்பியது ஆரியபட்டா என்ற சேட்டிலைட்டை விண்வெளிக்கு அனுப்பப்பட்டது. அதன் பின்பு சுமார் 50 ஆண்டுகள் ஆகும் நிலையில் இஸ்ரோ மிகப்பெரிய அளவுக்கு வளர்ச்சியை அடைந்துள்ளது. நிலவிற்கு தனது விண்கலத்தை அனுப்பி சாதனை படைத்துள்ளது.