TGV Max Actif பயணச்சிட்டைகளின் விலை அதிகரிப்பு!!
1 மார்கழி 2023 வெள்ளி 12:00 | பார்வைகள் : 4521
TGV Max Actif மற்றும் TGV Max Actif+ பயணச்சிட்டைகளின் கட்டணங்கள் 5 தொடக்கம் 10% சதவீதத்தினால் அதிகரிக்கப்பட உள்ளது.
முன்னதாக, மெற்றோ கட்டணங்கள், நவிகோ கட்டணங்கள் அனைத்தும் ஜனவரி 1 ஆம் திகதி முதல் அதிகரிக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது TGV சேவைகளில் பயன்படுத்தப்படும் TGV Max Actif+ பயணச்சிட்டைகளின் விலையும் அதிகரிக்கப்பட உள்ளன.
உதாரணமாக பரிசில் இருந்து லியோன் பயணிக்கும் TGV தொடருந்தின் மாதாந்த கட்டணம் ₤360 யூரோக்களில் இருந்து 396 யூரோக்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதுபோன்று கட்டணங்கள் 40 யூரோக்களில் இருந்து 45 யூரோக்கள் வரை அதிகரிப்புக்குள்ளாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.