சருமத்தைப் பளபளப்பாக்கும் அன்னாசி
1 மார்கழி 2023 வெள்ளி 16:10 | பார்வைகள் : 2302
பொதுவாக பழங்களை பொறுத்தவரை எல்லாவிதமான சருமத்துக்கும் பழங்களை பயன்படுத்தலாம்.அன்னாசி பழத்தில் விட்டமின் ஏ மற்றும் சி இரண்டும் அதிகமாக இருக்கின்றன.இவையிரண்டுமே சரும ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.
சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்குவது தொடங்கி முகத்தை பளபளப்பாக்கவும் மாசு அற்ற சருமத்தை பெறவும் பல வழிகளில் உதவுகின்றது.இயற்கை முறையில் அன்னாசி பழத்தை சருமத்திற்கு எவ்வாறு பயன்படுத்தலாம் என்று பார்க்கலாம்.
சிறிதளவு தேன்,அன்னாசிப் பழச்சாறு,இவையிரண்டையும் சேர்த்து நன்றாக மிக்ஸியில் அடிக்கவும். முகத்தை சுத்தமாக கழுவி இந்த பேஸ்ட்டை குழைத்து முகம் மற்றும் கழுத்து பகுதியில் தடவவும்.10 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவினால் முகப்பருக்கள் மறையும். தழும்புகளும் இருக்காது.
அன்னாசிப் பழத்துண்டை மசித்து அதனோடு பால் மற்றும் பன்னீர் சேர்த்து கலக்கவும்.பின்பு முகம் மற்றும் கழுத்து பகுதியில் தடவி 20 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவி எடுக்கவும்.
ஒரு தேக்கரண்டி அன்னாசிச்சாறு, இரண்டு மசித்த வாழைப்பழம் மற்றும் சிறிதளவு கற்றாழை ஜெல் என்பவற்றை சேர்த்து, மென்மையான பேஸ்ட் தயாரிக்க வேண்டும். இந்த கலவையை சருமத்தில் தடவி 15 முதல் 20 நிமிடங்கள் அப்படியே விட வேண்டும். பின்னர், முகத்தை கழுவி விட வேண்டும்.
அன்னாசிப் பழச்சாறுடன் சம அளவு தேங்காய் எண்ணெய் மற்றும் சிறிதளவு சீனி இவையனைத்தையும் சேர்த்து நன்றாக கலந்து சருமத்திற்கு ஸ்க்ரப் செய்ய வேண்டும். பின்பு குளிர்ந்த நீரில் சருமத்தை கழுவி கற்றாழை ஜெல்லை சருமத்திற்கு தடவ வேண்டும் .
மேற்குறிப்பிட்டுள்ள முறையினை வாரத்திற்கு இரண்டு முறை பின்பற்றி வந்தால் சருமத்தில் உள்ள பருக்களை கட்டுப்படுத்துவதுடன்,சருமத்தை ஆரோக்கியமாகவும் வைத்துக்கொள்ளலாம்.
முக்கியமாக அலர்ஜி,உணர்திறன் வாய்ந்த சருமம் உள்ளவர்கள், ஒவ்வாமை அல்லது குறிப்பிட்ட தோல் நோய்கள் உள்ளவர்கள் மேற்குறிப்பிட்ட முறையினை முயற்சிப்பதற்கு முன்பு உங்கள் கைகளில் முயற்சித்துப் பார்த்த பிறகு சருமத்திற்கு அப்ளை செய்யலாம்.