Paristamil Navigation Paristamil advert login

தலையை வெட்டி கையில் எடுத்து செல்லும் விஷால்..

தலையை வெட்டி கையில் எடுத்து செல்லும் விஷால்..

1 மார்கழி 2023 வெள்ளி 16:16 | பார்வைகள் : 4733


ஹரி இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் டீசர் வீடியோ சற்றுமுன் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான ஹரி இயக்கத்தில் ஏற்கனவே தாமிரபரணி, பூஜை ஆகிய இரண்டு திரைப்படங்களில் விஷால் நடித்துள்ளார். இந்நிலையில் இருவரும் மூன்றாவது முறையாக இணைந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது. இன்னும் ஒரு சில வாரங்களில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படத்திற்கு ’ரத்னம்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. சற்றுமுன் டைட்டில் டீசர் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது. இந்த டீசரில் விஷால், வில்லன் தலையை வெட்டி அதை கையோடு கொண்டு செல்லும் த்ரில் காட்சி உள்ளது.

விஷால் ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கும் இந்த படத்தில் சமுத்திரக்கனி, யோகி பாபு, கௌதம் மேனன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் சுகுமார் ஒளிப்பதிவில், ஜெய் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.