Paristamil Navigation Paristamil advert login

பரிஸ் : காவல்துறையினரின் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தீவிர வலதுசாரிகள்!

பரிஸ் : காவல்துறையினரின் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தீவிர வலதுசாரிகள்!

2 மார்கழி 2023 சனி 07:00 | பார்வைகள் : 2487


தீவிர வலதுசாரி குழு ஒன்று நேற்று பரிசில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தது. காவல்துறையினரின் தடையை மீறி இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றிருந்தது.

நேற்று டிசம்பர் 1, வெள்ளிக்கிழமை Place du Panthéon பகுதியில் அவர்கள் ஒன்றிணைந்தார்கள். Les Natifs என பெயரிடப்பட்டுள்ள அக்குழுவினர் மிகத்தீவிரமான வலதுசாரியினராவர். 200 பேர் வரை அங்கு கூடி, கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

காவல்துறையினர் இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தடை விதித்த போதும், தடையை மீறி அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். ஆனால் அசம்பாவிதங்கள் எதுவும் இடம்பெறவில்லை. காவல்துறையினர் தீவிரமான கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

அண்மையில், Drôme மாவட்டத்தில் உள்ள சிறிய கிராமம் ஒன்றில் இடம்பெற்ற கவலவரத்தில் 16 வயதுடைய தோமஸ் எனும் சிறுவன் கொல்லப்பட்டிருந்தான். இந்த சிறுவனின் சாவுக்கு நீதி கேட்டு அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தடை விதிப்பதாக காவல்துறை தலைமை அதிகாரி Laurent Nuñez கடந்த புதன்கிழமை அறிவித்திருந்தார். ஆனால் நேற்று வெள்ளிக்கிழமை மாலை பரிஸ் நீதிமன்றம் இந்த ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி அளித்திருந்தது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்