Paristamil Navigation Paristamil advert login

ஈராக்கில் துப்பாக்கிச்சூடு.! 11 பேர் பலி..!

ஈராக்கில் துப்பாக்கிச்சூடு.! 11 பேர் பலி..!

2 மார்கழி 2023 சனி 09:03 | பார்வைகள் : 5317


ஈராக்கின் டியாலா மாகாணத்தில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 11 போ் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

டியாலா மாகாணத்தில் சாலையோரம் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு வியாழக்கிழமை வெடிக்கச் செய்யப்பட்டது.

அதில் காயமடைந்தவா்களை மீட்பதற்காக அந்தப் பகுதியில் ஏராளமானவா்கள் குழுமினா்.

அப்போது அவா்களை நோக்கி பயங்கரவாதிகள் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனா்.

இதில் 11 போ் உயிரிழந்தனா்; அவா்கள் அனைவருமே பொதுமக்கள் ஆவா்.

தாக்குதல் நடத்திய பங்கரவாதிகள் சம்பவ இடத்திலிருந்து தப்பியோடிவிட்டனா் என்று அதிகாரிகள் கூறினா்.

இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

டியாலா பிராந்தியத்தில் ஏற்கெனவே பல முறை தாக்குதல் நடத்தியுள்ள இஸ்லாமிய தேச (ஐஎஸ்) பயங்கரவாத அமைப்பே இந்த துப்பாக்கிச்சூட்டையும் நடத்தியிருக்கலாம் என்று கருதப்படுகிறது. 

வர்த்தக‌ விளம்பரங்கள்