வாட்ஸ்அப்பில் செய்திகளை Schedule செய்வது எப்படி...?
2 மார்கழி 2023 சனி 09:45 | பார்வைகள் : 1810
வாட்ஸ்அப்பில் செய்திகளை எவ்வாறு schedule செய்வது என்று உங்களுக்குத் தெரியுமா? இந்த வழிமுறைகளை பின்பற்றவும்..
தற்போது வாட்ஸ்அப் தவிர்க்க முடியாததாகிவிட்டது. ஸ்மார்ட் போன் வைத்திருக்கும் அனைவரும் வாட்ஸ்அப்பை மிக இயல்பாக பயன்படுத்தும் நாட்கள் வந்துவிட்டன. மேலும் பயனாளர்களின் தேவைக்கேற்ப வாட்ஸ்அப் அவ்வப்போது புதிய வசதிகளை அறிமுகப்படுத்தி வருகிறது.
சில நேரங்களில் மெசேஜ் அனுப்ப மறந்துவிடுகிறோம். அதனால், அந்த செய்தியை Schedule செய்து வைத்துவிட்டால், சரியான நேரத்திற்கு குறித்த நபருக்கு அனுப்பிவிடும் வகையில், ஒரு வசதி இருந்தால் நன்றாக இருக்கும் என்று பலரும் விரும்புகின்றோம்.
ஆனால் இந்த வசதியை வாட்ஸ்அப் இன்னும் அதிகாரப்பூர்வமாக வழங்கவில்லை. ஆனால் நீங்கள் அனுப்ப விரும்பும் செய்தியை மூன்றாம் தரப்பு ஆப் மூலம் திட்டமிடலாம் என்பது உங்களுக்கு தெரியுமா?
அதாவது, நீங்கள் விரும்பும் நேரத்தில் அனுப்ப விரும்பும் நபருக்கு செய்தி நேரடியாகச் செல்லும். வாட்ஸ்அப்பில் இது போன்ற செய்தியை திட்டமிட என்ன செய்ய வேண்டும்? பின்பற்ற வேண்டிய படிகள் என்ன? இதற்கு எந்த ஆப்பை டவுன்லோட் செய்வது என்று இப்போது பார்க்கலாம்..
வாட்ஸ்அப்பில் தானாக செய்திகளை அனுப்ப பல்வேறு மூன்றாம் தரப்பு ஆப்கள் உள்ளன. இவற்றில் ஒன்று SKEDit எனப்படும் ஆப் சற்று பிரபலமாக உள்ளது. இந்த ஆப் Google Play Store-ல் கிடைக்கிறது. இந்த செயலியை பதிவிறக்கி இன்ஸ்டால் செய்வதன் மூலம் செய்திகளை (Schedule) திட்டமிடலாம்.
இந்த செயலியை எவ்வாறு பயன்படுத்துவது என்பது பற்றிய படிப்படியான செயல்முறை இங்கே உள்ளது.
* முதலில் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து SKEDit செயலியைப் பதிவிறக்கவும்.
* அதன் பிறகு உங்கள் Facebook கணக்கில் உள்நுழைய வேண்டும்.
* பின்னர் கணக்கை உருவாக்க உங்கள் பெயர், மின்னஞ்சல் மற்றும் கடவுச்சொல்லை உள்ளிடவும்.
* அதன் பிறகு மின்னஞ்சலுக்கு சரிபார்ப்பு மின்னஞ்சல் அனுப்பப்படும்.
* மின்னஞ்சலைச் சரிபார்த்த பிறகு, வாட்ஸ்அப்பைக் கிளிக் செய்து, SKEDit செயலிக்கு தேவையான அனுமதிகளை வழங்கவும்.
* அதன்பிறகு, நீங்கள் செய்தியை அனுப்ப விரும்பும் நேரத்தைத் தேர்ந்தெடுத்து அதை ஸ்கெடுல், செய்தி சரியான நேரத்தில் செல்லும்.
* திட்டமிடப்பட்ட செய்தியை அனுப்புவதற்கு முன் உங்கள் அனுமதியை வழங்க விரும்பினால் அந்த விருப்பத்தையும் நீங்கள் தேர்ந்தெடுக்கலாம். இப்படிச் செய்வதன் மூலம்.. திட்டமிடப்பட்ட செய்தியை அனுப்பும்போது.. அது முதலில் உங்கள் அனுமதியைக் கேட்கும்.