Paristamil Navigation Paristamil advert login

மும்பை இந்தியன்ஸ் அணியில்  ஹார்திக் பாண்டியா 

மும்பை இந்தியன்ஸ் அணியில்  ஹார்திக் பாண்டியா 

2 மார்கழி 2023 சனி 09:49 | பார்வைகள் : 1197


குஜராத் டைட்டன்ஸ் அணியிலிருந்து மும்பை இந்தியன்ஸ் அணிக்கு திரும்பியுள்ள ஹார்திக் பாண்டியா மொத்தமாக இனி எவ்வளவு சம்பாதிப்பார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

முன்னாள் மும்பை இந்தியன்ஸ் வீரரான ஹார்திக் பாண்டியாவுக்கு இந்த ஆண்டு அவரது கிரிக்கெட் வாழ்க்கை சிறப்பாக அமைந்தது. 

சகல துறை வீரரான ஹார்திக் பாண்டியா தமது குஜராத் டைட்டன்ஸ் அணியை இறுதிப்போட்டிக்கு அழைத்து சென்றதுடன், கிண்ணத்தையும் வெல்ல வைத்தார்.

அத்துடன் தேசிய அணி களம் கண்ட ஆசிய கிண்ணம் 2023 தொடரில் இந்திய அணியின் வெற்றிக்கு உழைத்தவர்களில் பாண்டியாவும் ஒருவர். தற்போது 2024 ஐபிஎல் தொடரில் மீண்டும் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ரோகித் சர்மா தலைமையில் களமிறங்க இருக்கிறார்.

பொதுவாக ஐபிஎல் நிர்வாகத்தை பொறுத்தமட்டில் இரண்டு வகையான வர்த்தகம் நடைபெறும், ஒன்று ஒருவழி வர்த்தகம். இதில் ஒரு அணி இன்னொரு அணியில் இருந்து ஒன்று அல்லது அதற்கும் மேற்பட்ட எண்ணிக்கையிலான வீரர்களை வாங்கலாம்.

இன்னொன்று இருவழி வர்த்தகம். இதில் ஒரு வீரருக்கு பதிலாக இன்னொரு வீரரை மாற்றிக்கொள்வது. ஆனால் ஹார்திக் பாண்டியா ஒருவழி வர்த்தகமூடாக மும்பை அணிக்கு திரும்பியுள்ளார்.

இதனால், அவர் குஜராத் அணியில் பெற்றுவந்த அதே ரூ 15 கோடி தொகையை மும்பை அணி நிர்வாகத்திடம் இருந்து ஆண்டு சம்பளமாக பெறவிருக்கிறார். அத்துடன் இரு அணிகளுக்கும் இடையேயான பரிமாற்றக் கட்டணத்தில் குறிப்பிட்ட சதவீதத்தைப் பெறுவார்.

BCCI நிர்வாகத்தை பொறுத்தமட்டில், இந்த பரிமாற்றக் கட்டணத்திற்கு வரம்பு எதுவும் உறுதி செய்யவில்லை. இதனால் ஹார்திக் பாண்டியாவுக்காக இரு அணிகளும் எவ்வளவு தொகை பேரம் பேசினார்கள் என்பது வெளிவர வாய்ப்பில்லை என்றே கூறப்படுகிறது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்