காசாவில் மீண்டும் தீவிரமடையும் போர் பதற்றம்...
2 மார்கழி 2023 சனி 10:05 | பார்வைகள் : 2790
இஸ்ரேல் மற்றும் காசாவுக்கு இடையிலான போர் ஒருவார தற்காலிகப் போர் நிறுத்தப்பட்டு இருந்தது.
இப்பொழுது நிறைவடைந்தொடர்ந்து காசாவில் மீண்டும் இஸ்ரேல் -ஹமாஸ் இடையிலான போர் தொடங்கியுள்ளது.
இந்த தாக்குதலில் 200 தீவிரவாத முகாம்களை தாக்கி அழித்ததாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.
அத்துடன் இஸ்ரேல் தாக்குதலில் 178 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டு இருப்பதாகவும் 589 பேர் காயமடைந்து இருப்பதாக காசா மருத்துவ துறை அறிவித்துள்ளது.
காயமடைந்தவர்களில் பெண்கள் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகம் என கூறப்பட்டுள்ளது.
இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆன்டனி பிளிங்கன், போர் நிறுத்தம் முடிவதற்கு முன்பாகவே ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது ராக்கெட் வீச்சு நடத்தியதுதான் மீண்டும் போர் தீவிரமடைய காரணம் என்று கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.