Paristamil Navigation Paristamil advert login

ஐக்கிய அமீரகத்தில் பறக்கும் டாக்ஸி சேவை... முக்கிய தகவல்கள்

ஐக்கிய அமீரகத்தில் பறக்கும் டாக்ஸி சேவை... முக்கிய தகவல்கள்

2 மார்கழி 2023 சனி 10:23 | பார்வைகள் : 2623


ஐக்கிய அமீரகத்தில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் பறக்கும் டாக்ஸிகளை அறிமுகப்படுத்த உள்ளனர். குறித்த பறக்கும் டாக்ஸிகளுக்கு அடுத்த ஆண்டில் அனுமதி அளிக்கப்படும் என்றே தகவல் வெளியாகியுள்ளது.

இதனால் மக்கள் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கலாம் எனவும், தற்போதைய பயண நேரத்துடன் ஒப்பிடும்போது கிட்டத்தட்ட பாதி நேரத்தில் ஐக்கிய அமீரகம் முழுவதும் பயணிக்க முடியும் என்றே கூறப்படுகிறது.

இந்த நிலையில் பறக்கும் டாக்ஸிகளால் ஏற்படவிருக்கும் பயன்கள் மற்றும் கட்டணம் உள்ளிட்ட அனைத்து தரவுகளும் வெளியிடப்பட்டுள்ளது. 2026 முதல் காலாண்டில் ஐக்கிய அரபு அமீரகத்தில் முழுமையாக மின்சாரத்தில் இயங்கும் பறக்கும் டாக்ஸிகள் அறிமுகம் செய்யப்படும்.

இதன் இறுதிகட்ட பணிகள் 2024ல் துவங்கி முடிக்கப்படும். முதற்கட்டமாக ஐக்கிய அமீரகத்தின் அபுதாபி முதலீட்டு அலுவலகம் மற்றும் கலிபோர்னியாவை சேர்ந்த Archer விமான நிறுவனமும் இணைந்து இந்த பறக்கும் டாக்ஸி திட்டத்தை அமுலுக்கு கொண்டுவர உள்ளனர்.

இவர்களுடன் முதன்மையாக சில நிறுவனங்களும் இணைந்து செயல்பட உள்ளனர். ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் பறக்கும் டாக்ஸி திட்டத்தை அமுலுக்கு கொண்டுவர Archer நிறுவனம் முயற்சி மேற்கொண்டு வருகிறது.

இதனால் ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபி மாகாணத்தில் முதல் முதலில் பறக்கும் டாக்ஸி அறிமுகமாக உள்ளது. முதலில், பறக்கும் டாக்ஸிகள் முழுவதுமாக மின்சாரத்தில் இயங்க உள்ளது என்பதால், காற்று மாசு பிரச்சனை இருக்காது.

இரண்டாவது உடனடி நன்மை என்பது நேர சேமிப்பு. மூன்றாவதாக நகரங்களுக்கு இடையே, மக்கள் மிக விரைவாக பயணிக்க முடியும். பயண நேரம் குறைவு என்பதால், அதை தனிப்பட்ட அல்லது தொழில் ரீதியாக மேம்பாட்டுக்கு பயன்படுத்த முடியும்.

ஐந்தாவது, இந்த திட்டம் புதிய முதலீடு மற்றும் வேலை வாய்ப்புகளை உருவாக்கும். ஆறாவதாக, அடைய கடினமாக இருக்கும் பகுதிகளை பறக்கும் டாக்ஸி சேவையால் இணைக்க முடியும். இறுதியாக அவசர தேவைகளுக்கு பறக்கும் டாக்ஸி திட்டம் பேருதவியாக இருக்கும்.

அமீரக குடியிருப்பாளர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் போக்குவரத்து நெரிசலைத் தவிர்த்து அமீரகம் முழுவதும் பயணிக்க இது ஒரு வாய்ப்பாக அமையும், இதனால் அவர்களின் நேரத்தின் 40 சதவீதம் மிச்சமாகும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

துபாய் மாகாணத்தில் இருந்து சாலை ஊடாக அபுதாபி செல்ல தற்போதைய சூழலில் அதிகபட்சம் 2 மணி நேரமாகலாம். ஆனால், பறக்கும் டாக்ஸியை பயன்படுத்தினால், வெறும் 20 நிமிடத்தில் துபாயில் இருந்து அபுதாபி செல்ல முடியும்.

கட்டணம் என்பது அறிமுக நாட்களில் அதிகமாக இருக்கவே வாய்ப்பு என்று கூறப்படுகிறது. அதாவது Uber Black அல்லது Uber Comfort சேவைகளை பயன்படுத்துவோருக்கு இணையாக இருக்கவே வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால், இந்த சேவை விரிவடையும் என்றால், Uber X சேவை அளவுக்கு கட்டணம் சரிவடைய வாய்ப்புள்ளதாக கூறுகின்றனர். 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்