Val-d'Oise : வாள் வெட்டு தாக்குதலில் ஒருவர் பலி!!

2 மார்கழி 2023 சனி 12:41 | பார்வைகள் : 6200
Val-d'Oise நகரில் இடம்பெற்ற வாள் வெட்டு தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். வெள்ளிக்கிழமை இரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இரவு 10.45 மணி அளவில் Fosses (Val-d'Oise) நகரில் குழு மோதல் ஒன்று இடம்பெற்றது. அங்குள்ள உணவகம் ஒன்றின் அருகே குவிந்த இளைஞர்கள் பலர் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். அதன் முடிவில் நபர் ஒருவர் வாள் ஒன்றினால் இருவரைத் தாக்கியுள்ளார்.
இந்த தாக்குதலில் 24 வயதுடைய இளைஞன் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார். இரண்டாவது நபர் படுகாயமடைந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த தாக்குதல் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.