Paristamil Navigation Paristamil advert login

’ஆளவந்தான்’ டிரைலர்.. இன்றைய தலைமுறையினரை கவருமா?

 ’ஆளவந்தான்’ டிரைலர்.. இன்றைய தலைமுறையினரை கவருமா?

2 மார்கழி 2023 சனி 14:26 | பார்வைகள் : 1892


உலகநாயகன் கமல்ஹாசன் இரட்டை வேடங்களில் நடித்த ‘ஆளவந்தான்’ திரைப்படம் கடந்த 2001 ஆம் ஆண்டு வெளியான நிலையில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த படம் ட்ரீம் செய்யப்பட்டு டிஜிட்டலில் வரும் 8ஆம் தேதி வெளியாக உள்ளது.

இந்த நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற பாடல்கள் ஏற்கனவே வெளியான நிலையில் சற்று முன் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது. 2001 ஆம் ஆண்டு பார்த்த ‘ஆளவந்தான்’ திரைப்படத்திற்கும் இந்த படத்திற்கும் மிகுந்த வித்தியாசம் இருக்கும் என்பது இந்த டிரைலரில் இருந்தே தெரிய வருகிறது

அண்ணன் தம்பி என்ற இரண்டு வித்தியாசமான வேடங்களில் கமல்ஹாசன் நடித்துள்ள இந்த படத்தில் நந்து என்ற கேரக்டருக்காக கமல்ஹாசன் எந்த அளவுக்கு மெனக்கெட்டு இருக்கிறார் என்பதை இன்றைய இளைய தலைமுறை ரசிகர்கள் புரிந்து கொள்வார்கள்.

இந்த படம் வெளியான நேரத்தில் பலருக்கு இந்த படம் புரியவில்லை, ஆனால் தற்போதைய டிஜிட்டல் உலகில் இந்த படத்திற்காக அப்போது செய்த தொழில்நுட்ப பணிகளை பார்க்கும்போது பிரமிப்பாக இருக்கிறது. இதனால் நிச்சயம் இன்றைய இளைய தலைமுறை ரசிகர்களுக்கு இந்த படம் பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் சங்கர் ஈசான் இசையில் வைரமுத்து பாடல் வரிகளில் உருவான இந்த படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ளார்.