நீடித்த போர் நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ள ஜனாதிபதி மக்ரோன்!

2 மார்கழி 2023 சனி 16:00 | பார்வைகள் : 14489
இஸ்ரேல்-காஸா பகுதியில் ஒரு நீடித்த போர் நிறுத்தம் ஒன்றுக்கு ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் அழைப்பு விடுத்துள்ளார்.
கடந்த ஒருவாரகாலமாக போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று வெள்ளிக்கிழமை மீண்டும் அங்கு போர் தொடங்கியுள்ளது. இஸ்ரேல் இராணுவத்தினர் காஸா பகுதியில் தொடர் ஷெல் தாக்குதல்களை மேற்கொண்டுவருகின்றனர்.
இந்நிலையில், இன்று COP28 மாநாட்டில் உரையாற்றிய ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன், “காஸா பகுதியில் மீண்டும் போர் தொடங்குவது கவலைக்குரிய விடயமாகும். இது பல விவாதங்களில் கவனத்தில் கொள்ள வேண்டி உள்ளது. அங்கு நீடித்த போர் நிறுத்தம் ஒன்றுக்கான அவசியம் உள்ளது” என ஜனாதிபதி மக்ரோன் தெரிவித்தார்.
**
ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்ற மாநாடு (COP28 ) ஐக்கிய அரபு இராச்சியத்தில் தற்போது நடைபெற்று வருகிறது. அதில் கலந்துகொள்ள ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் அங்கு பயணித்துள்ளார். இன்று சனிக்கிழமை நண்பகல் அவர் அங்கு உரையாற்றும் போது இதனைக் குறிப்பிட்டார்.
3 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1