Paristamil Navigation Paristamil advert login

மகளிர் பிரீமியர் லீக்கான  ஏலம் அறிவிப்பு! 

மகளிர் பிரீமியர் லீக்கான  ஏலம் அறிவிப்பு! 

3 மார்கழி 2023 ஞாயிறு 04:44 | பார்வைகள் : 1962


WPL தொடருக்கான ஏலம் தொடங்க உள்ள நிலையில், வீராங்கனைகளுக்கு அடிப்படை விலை குறித்த விபரம் வெளியாகியுள்ளது.

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் போல WPL எனும் மகளிர் பிரீமியர் லீக்கின் முதல் தொடர் இந்த ஆண்டு நடத்தப்பட்டது. இதில் குஜராத் ஜெயன்ட்ஸ் அணியை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் சாம்பியன் பட்டத்தை வென்றது.

இந்த நிலையில் 2024ஆம் ஆண்டு 2வது சீசனுக்கான ஏலம் வரும் 9ஆம் திகதி தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

2024 சீசனில் 165 வீராங்கனைகளும் பங்கேற்க உள்ளனர். இதில் 104 இந்திய வீராங்கனைகள், 61 வெளிநாட்டு வீராங்கனைகள் அடங்குவர். 

வெளிநாட்டு வீராங்கனைகளுக்கான அடிப்படை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேற்கிந்திய தீவுகளின் டியன்ட்ரா டோட்டின் மற்றும் அவுஸ்திரேலியாவின் கிம் கார்த் ஆகியோருக்கு 50 லட்சம் அடிப்படை விலையாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.  

அவுஸ்திரேலியாவின் அன்னபேல் சதர்லேண்ட், ஜியார்ஜியா வாரெஹம், ஏமி ஜோன்ஸ் (இங்கிலாந்து), ஷாப்னிம் இஸ்மாயில் (தென் ஆப்பிரிக்கா) ஆகியோருக்கு 40 லட்சம் அடிப்படை விலை ஆகும். 

இலங்கை கேப்டன் சமரி அதப்பத்து, டேனில்லே வையாட்(இங்கிலாந்து), அவுஸ்திரேலியாவின் போஎபே லிட்ச்ஃபீல்டு, அமண்டா வெல்லிங்டன், ஒர்லா ப்ரெண்டர்கஸ்ட்(அயர்லாந்து), மருஃபா அக்தர்(வங்கதேசம்) ஆகியோருக்கு 30 லட்சம் அடிப்படை விலை ஆகும்.   

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்