Paristamil Navigation Paristamil advert login

தெலுங்கானாவில் சந்திரசேகர ராவை சரிய வைத்த குடும்ப அரசியல்

தெலுங்கானாவில் சந்திரசேகர ராவை சரிய வைத்த குடும்ப அரசியல்

3 மார்கழி 2023 ஞாயிறு 12:00 | பார்வைகள் : 2029


மாநிலம் உருவாக காரணமாக இருந்த பாரத் ராஷ்ட்ர சமிதி கட்சி தலைவரும், தற்போதைய முதல்வருமான சந்திரசேகர ராவ் பின்னடைவை சந்தித்து வருகிறார்.

தெலுங்கானா தனிமாநிலமாக உருவாக வேண்டும் என்று உண்ணாவிரதம் இருந்து அதில் வெற்றியும் பெற்றவர் சந்திரசேகர ராவ். 

அப்போது மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் தெலுங்கானா மாநிலத்தை உருவாக்கியது. காங்கிரஸ் போட்ட கணக்கு வேறு, தெலுங்கானா மாநிலத்தை உருவாக்கி கொடுத்தால் அம்மாநில மக்கள் நமக்கு தான் ஓட்டளிப்பார்கள் என்று காங்கிரஸ் எதிர்பார்த்தது. ஆனால் நடந்தது வேறு.

தெலுங்கானா உருவாக உண்ணாவிரதம் இருந்த சந்திரசேகர ராவுக்கு மக்கள் ஓட்டளித்து ஆட்சி கட்டிலில் அமர வைத்தனர். 

அதன் பிறகு காங்கிரஸ் ஆட்சிக்கு வரவே முடியவில்லை. ஆனால் இந்த தேர்தலில் நிலைமை தலைகீழாக மாறி காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் நிலையில் உள்ளது. 

இதற்கு சில காரணங்கள் கூறப்படுகின்றன. சந்திரசேகர ராவ் கட்சியினர் மீது நிறைய ஊழல் புகார்கள் இருக்கின்றன. 

மேலும் அவரது மகனும், மகளும் கட்சியில் தனி அதிகார மையமாக வலம் வருகின்றனர். அக்கட்சியும் குடும்ப கட்சியாக மாறி மக்களிடம் வெறுப்பை சம்பாதித்துள்ளது. 

இவையெல்லாம் ஒன்று சேர்ந்து சந்திரசேகர ராவ் கட்சியை கவிழ்க்க போகிறது. 
 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்