Paristamil Navigation Paristamil advert login

Armand R - யார் இந்த பயங்கரவாதி ?

Armand R - யார் இந்த பயங்கரவாதி ?

3 மார்கழி 2023 ஞாயிறு 08:00 | பார்வைகள் : 5059


நேற்று சனிக்கிழமை இரவு பரிசில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன், மேலும் இருவர் காயமடைந்தும் உள்ளனர். பரிசை உலுக்கிய இந்த தாக்குதலை மேற்கொண்டிருந்தது 26 வயதுடைய Armand R எனும் நபராகும். Essonne மாவட்டத்தில் பெற்றோர்களுடன் வசிக்கும் குறித்த தாக்குதலாளி தொடர்பில் பல்வேறு செய்திகள் தற்போது வெளியாகியுள்ளன.

பிரெஞ்சு குடியுரிமை கொண்ட Armand R, Neuilly-sur-Seine (Hauts-de-Seine) நகரில் 1997 ஆம் ஆண்டு பிறந்துள்ளார். ஈரானிய பெற்றோர்களுக்கு பிறந்த குறித்த நபர் அடிப்படை இஸ்லாமிய சிந்தனைகளுக்கு ஆட்பட்டவர் என தெரியவருகிறது.

கடந்த 2016 ஆம் ஆண்டு கோடைகாலத்தில் அவன் La Défense பகுதியில் பயங்கரவாத தாக்குதல் ஒன்றை மேற்கொள்ள திட்டமிட்டிருந்தார். ஆனா உளவுத்துறையினரால் அவர் அடையாளம் காணப்பட்டு, கைது செய்யப்பட்டிருந்தார். பின்னர் அவருக்கு பரிஸ் குற்றவியல் நீதிமன்றம் நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது. 2020 ஆம் ஆண்டு அவர் விடுதலையாகியிருந்தார்.

சில ஆண்டுகளின் பின்னர், நேற்று சனிக்கிழமை
parc de Passy பகுதியில் வைத்து சுற்றுலாப்பயணிகள் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளார். இரவு 10 மணிக்கு சற்று முன்னதாக ஜெர்மனிய பிரஜை ஒருவர் மீது கத்திக்குத்து தாக்குதல் மேற்கொண்டுள்ளதுடன், மேலும் இருவரை சுத்தியலினால் தாக்கியுள்ளார்.

உடனடியாக அவர் 7 ஆம் வட்டார காவல்துறையினரால் மின்சாரத்துப்பாக்கினால் சுடப்பட்டு கைது செய்யப்பட்டார். 

அவர் இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பான  ISIS இற்கு இந்த தாக்குதலை தாம் தியாகம் செய்வதாகவும், “ஆஃப்கான் மற்றும் பாலஸ்தீனத்தில் இஸ்லாமியர்கள் கொல்லப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை!” எனவும் தெரிவித்ததாக உள்துறை அமைச்சர் தகவல் வெளியிட்டுள்ளார்.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்