Paristamil Navigation Paristamil advert login

ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை !

 ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை !

3 மார்கழி 2023 ஞாயிறு 06:44 | பார்வைகள் : 7029


பிலிப்பைன்ஸில் 7.5 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பிலிப்பைன்ஸின் மிண்டோனா நகருக்கு அருகே ஏற்பட்ட நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கியுள்ளன.

நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தெற்கு பிலிப்பைன்ஸ் மற்றும் ஜப்பான், இந்தோனேசியா மற்றும் மலேசியாவின் சில பகுதிகளை சுனாமி அலைகள் தாக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், மேற்கு ஜப்பானின் பசிபிக் பகுதியில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்