Paristamil Navigation Paristamil advert login

எரிசக்தி தொடர்பில்  110 ஐரோப்பிய நாடுகள் திட்டம்!

எரிசக்தி தொடர்பில்  110 ஐரோப்பிய நாடுகள் திட்டம்!

3 மார்கழி 2023 ஞாயிறு 06:47 | பார்வைகள் : 2579


ஐரோப்பிய ஆணைக்குழுவின் தலைவர் உர்சுலா வோன் டெர் லேயன் (Ursula von der Leyen) 2030ஆம் ஆண்டுக்குள் 110 நாடுகள் அவற்றின் புதுப்பிக்கக்கூடிய எரிசக்தித் திறனை இருமடங்கு அதிகரிக்கத் திட்டமிடுவதாகத் தெரிவித்துள்ளார்.

அந்த இலக்கிற்கு ஏற்பச் செயல்பட அந்நாடுகள் விரும்புவதாக அவர் கூறினார்.

அதற்கான ஒப்பந்தம் ஏற்கனவே செப்டம்பரில் G20 நாடுகளின் ஒப்புதலைப் பெற்றிருந்தது. 

உலக அளவில் மொத்த வெப்பவாயு வெளியேற்றத்தில் 80 விழுக்காடு G20 நாடுகளிலிருந்து வருகிறது.

அதன் தொடர்பான அறிவிப்பு இன்று வெளியிடப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்