இலங்கையில் பொருட்களின் விலைகள் கணிசமான அளவில் உயரும்

3 மார்கழி 2023 ஞாயிறு 07:20 | பார்வைகள் : 12953
2024 ஆம் ஆண்டில், இலங்கையில் பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகள் கணிசமான அளவில் அதிகரிக்கும் என இலங்கை வடமேற்கு பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறை பேராசிரியர் அமிந்த மெத்சிலா தெரிவித்தார்.
காரணம், மறைமுக வரிகள் மூலம் 72 சதவீதம் கூடுதல் வருவாயை அரசு எதிர்பார்ப்பதே ஆகும் என வர குறிப்பிட்டுள்ளார்.
அடுத்த ஆண்டு பட்ஜெட் ஆவணத்தின்படி 122400 கோடி ரூபாய் (1224 பில்லியன்) கூடுதல் வருமானத்தை அரசு எதிர்பார்க்கிறது.
அதில் 72 சதவீதம் வாட் மற்றும் இதர கூடுதல் வரிகள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு வரி விதிக்கப்படும் போது, வணிகர்கள் வாடிக்கையாளரிடமிருந்து வரியை முழுமையாக வசூலிக்க முயற்சிப்பார்கள். அதன்படி, இந்த 72 சதவீத மறைமுக வரி நுகர்வோர் மீது செலுத்தப்படுவது தவிர்க்க முடியாதது என பேராசிரியர் தெரிவித்துள்ளார்.
அரிசி, மாவு, சர்க்கரை, பருப்பு, உருளைக்கிழங்கு, வெங்காயம் போன்ற அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை 72 சதவீதம் உயரும். பொது மக்களின் வாழ்க்கைத் தரம் குறைந்து பணவீக்கம் அதிகரிக்கும் என பேராசிரியர் அமிந்த மெத்சிலா மேலும் தெரிவித்தார்.
4 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1