இரண்டு வருட விசாரணைகளின் பின்னர் - முக்கிய போதைப்பொருள் கடத்தல்காரர் கைது!!!
3 மார்கழி 2023 ஞாயிறு 15:00 | பார்வைகள் : 3989
கடந்த இரண்டு வருடமாக இடம்பெற்று வந்த விசாரணைகளை அடுத்து, பிரான்சில் பெரும் அச்சுறுத்தலாக இருந்து வந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
நாடு முழுவதும் போதைப்பொருள் விநியோகம் செய்யும் மிக முக்கிய குற்றவாளியும், பெல்ஜியம், நெதர்லாந்து போன்ற நாடுகளில் இருந்து போதைப்பொருள் கடத்திக்கொண்டு வரும் குற்றவாளியுமான Mouez K எனும் நபரே கைது செய்யப்பட்டுள்ளார். அவர் தொடர்பில் கடந்த இரண்டு ஆண்டுகள் மேற்கொண்டு வந்த விசாரணைகளை அடுத்தே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பரிஸ் 17 ஆம் வட்டாரத்தில் வைத்து கடந்த நவம்பர் 17 ஆம் திகதி அவர் கைது செய்யப்பட்டதாகவும், அவருடன் 300 கிலோ கஞ்சா போதைப்பொருளும், 75 கிலோ கொக்கைன் போதைப்பொருளும், AK47s துப்பாக்கிகளும், துப்பாக்கி குண்டுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
Sevran (Seine-Saint-Denis) நகரைச் சேர்ந்த 44 வயதுடைய குறித்த நபர் கடந்த பல வருடங்களாக தேடப்பட்டு வந்த நிலையில் தற்போது செய்யப்பட்டுள்ளார். அவரது கைது சம்பவத்தினால் பிரான்சில் போதைப்பொருள் கடத்தல் சங்கிலி ஒன்று உடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.