பரிசில் தாக்குதல்! - தாக்குதலாளியின் குடும்பத்தினர் மூவர் கைது!!

3 மார்கழி 2023 ஞாயிறு 17:00 | பார்வைகள் : 10669
பரிசில் தாக்குதல் மேற்கொண்ட பயங்கரவாதி Armand R இன் குடும்பத்தினர் மூவர் காவல்துறையினரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பயங்கரவாதியின் பெற்றோர்கள் மற்றும் சகோதரி ஒருவரும் கைது செய்யப்பட்டு, காவல்நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது. நேற்று இடம்பெற்ற தாக்குதலில் பின்னர் அவரது வீடு காவல்துறையினரால் சோதனையிடப்பட்டிருந்தது.
Armand Rajabpour-Miyandoab எனும் முழுப்பெயர் கொண்ட குறித்த பயங்கரவாதி, ஜெர்மனிய சுற்றுலாப்பயணி ஒருவரை கத்தியால் குத்தி கொன்றதுடன், மேலும் இருவரை சுத்தியலால் தாக்கியுள்ளார்.
பின்னர் அவர் காவல்துறையினரால் மின்சாரத்துப்பாக்கியால் சுடப்பட்டு கைது செய்யப்பட்டார். 7 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த நான்கு காவல்துறையினர் விரைவாக செயற்பட்டு தாக்குதலாளியை கைது செய்தனர்.
சம்பவம் தொடர்பில் முழுமையான தகவல்களை பெற குறித்த நான்கு காவல்துறையினரும் விசாரணைகளுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025
-
1